துண்டு துண்டாக வெட்டப்பட்ட மாடல் அழகி.. கணவன் வெறிச்செயல்.. சுவிட்சர்லாந்தில் நடந்த கொடுமை!

சுவிட்சர்லாந்து: மிஸ் சுவிட்சர்லாந்து அழகி போட்டியின் இறுதிச் சுற்றுவரை தேர்வான அழகி கிறிஸ்டினா ஜோக்சிக்மோவிக் என்பவரை அவரது கணவரே துண்டு துண்டாக வெட்டி, அவரது உடல் பாகங்களை ரசாயனத்தில் கரைத்துள்ளார். இந்தத் தகவல் சுவிட்சர்லாந்து நாட்டையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. அமைதியான நாடு, பெண்களுக்கு பாதுகாப்பு உள்ள நாடு என பெயர் பெற்ற சுவிட்சர்லாந்து நாட்டில் இவ்வாறு நடைபெற்றுள்ளது என்பது, பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கிறிஸ்டினா ஜோக்சிமோவிக் மற்றும் தாமஸ் ஆகியோர் கணவன் மனைவி ஆவர். இதில் கிறிஸ்டினா ஜோக்சிமோவிக் மாடல் அழகி. 2003 இல் மிஸ் நார்த்வெஸ்ட் சுவிட்சர்லாந்து பட்டத்தை வென்றார் மற்றும் 2008 மிஸ் சுவிட்சர்லாந்து போட்டியில் இறுதிப் போட்டியாளரானார். அதன் பின்னர் மிஸ் சுவிட்சர்லாந்து மற்றும் மிஸ் யுனிவர்ஸ் போட்டிகளுக்கு அழகிகளை தயார் படுத்தும் பணியில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு, அதற்காக தனி நிறுவனத்தை உருவாக்கி அதனை முறையாக நடத்தியும் வந்துள்ளார். விளம்பரங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் சினிமாக்களிலும் சில கதாபாத்திரங்களில் நடித்தும் வந்துள்ளார்.

miss switzerland kristina joksimovic switzerland

கிறிஸ்டினா ஜோக்சிமோவிக் மற்றும் அவரது கணவருக்கு இடையில் அடிக்கடி சண்டைகள் வருவது வாடியாக இருந்துள்ளது. இது தொடர்பாக கிறிஸ்டினா ஜோக்சிமோவிக் தனது வழக்கறிஞரிடம் கூறியுள்ளார். மேலும், ஒருமுறை சண்டையில்கணவர் தாமஸ், கிறிஸ்டினா ஜோக்சிமோவிக் தலையைப் பிடித்து, சுவரில் வேகமாக மோதச் செய்துள்ளார். இதுமட்டும் இல்லாமல், அவரது முடியைப் பிடித்து வேகமாக ஆட்டுவது என தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். இந்தத் தகவலை கொலைக்குப் பின்னர் காவல்துறையினரிடம் கிறிஸ்டினா ஜோக்சிமோவிக்-இன் வழக்கறிஞர்கள் கூறியுள்ளனர்.

கொலை: கிறிஸ்டினா ஜோக்சிமோவிக் உடல் அவரது வீட்டில் உள்ள துணி துவைக்கும் அறையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டபோது அவரது உடலில் சில பாகங்கள் இல்லாமலும் இருந்துள்ளது. கிறிஸ்டினா ஜோக்சிமோவிக்-இன் கணவர் தாமஸ், தனது மனைவியைக் கொலை செய்தது மட்டும் இல்லாமல், அவரது உடலை துண்டு துண்டாக வெட்டியுள்ளார். உடலை வெட்ட தோட்டத்தில் பயன்படுத்தும் கத்திகளையும் கத்தரிக்கோலையும் பயன்படுத்தியுள்ளார்.

miss switzerland kristina joksimovic switzerland

கரைக்கப்பட்ட பாகங்கள்: அதன் பின்னர் துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடலை பல ரசாயனங்கள் கொண்டு கரைத்துள்ளார். உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கிறிஸ்டினா ஜோக்சிமோவிக்-இன் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர்கள், கிறிஸ்டினா ஜோக்சிமோவிக் கழுத்து நெறித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் எனக் கூறியுள்ளனர். ஆனால் கிறிஸ்டினா ஜோக்சிமோவிக்-இன் கணவர் தாமஸோ, காவல்துறையினரிடம், எனது மனைவி என்னை கத்தியால் குத்தவந்தார், தற்காப்புக்காக அவரது கழுத்தை நெறித்தேன், அதனால் இறந்துவிட்டார் எனக் கூறியுள்ளார்.

சாடிஸ்ட்: தாமஸையும் சோதித்த மருத்துவர்கள், அவருக்கு மனநல பிரச்னை இருப்பதைக் கண்டுபிடித்துள்ளனர். மேலும் இவருக்கு மனநல பாதிப்பு மட்டும் இல்லாமல், கொடூரக் குற்றங்களை செய்யும் சாடிஸ்ட் மனநிலை இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். மிஸ் சுவிட்சர்லாந்து அழகி போட்டியில் இறுதிச் சுற்று வரை தேர்வு செய்யப்பட்ட மாடல் அழகி கிறிஸ்டினா ஜோக்சிமோவிக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சுவிட்சர்லாந்து முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

miss switzerland kristina joksimovic switzerland

கிறிஸ்டினா ஜோக்சிமோவிக்: செர்பிய பாரம்பரியத்துடன் பின்னிங்கனில் பிறந்தவர் கிறிஸ்டினா ஜோக்சிமோவிக். ஆரம்பத்தில் மாடலிங் தொழிலில் ஈடுபட்டுவந்தார். 2003 இல் மிஸ் நார்த்வெஸ்ட் சுவிட்சர்லாந்து பட்டத்தை வென்றார். அதன் பின்னர் 2008ஆம் ஆண்டு மிஸ் சுவிட்சர்லாந்து போட்டியில் இறுதிப் போட்டியாளராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பின்னர் பயிற்சியாளராக மாறினார், ஆர்வமுள்ள மாடல்கள் மற்றும் மாடலிங்கில் ஆர்வமுள்ள பெண்களுக்கு நம்பிக்கையை வளர்க்கவும் அவர்களை மாடலிங் துறையில் மேம்படுத்தவும் ஒரு பயிற்சி நிறுவனத்தை தொடங்கி நடத்திவந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X