வடை போச்சே.. உலக அழகி போட்டியை வென்றது யாரு தெரியுமா?.. விழாவில் பங்கேற்ற இந்திய நடிகைகள்!

மும்பை: 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியாவில் உலக அழகிப் போட்டி நடைபெற்ற நிலையில், இந்தியாவை சேர்ந்த அழகி சினி ஷெட்டி மகுடம் சூடுவார் என அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி சுற்று வரை முன்னேறிய அவர் மகுடத்தை மிஸ் செய்து விட்டார்.

மும்பை ஜியோ கன்வென்ஷன் சென்டரில் நேற்று இரவு நடைபெற்ற 72வது உலக அழகிப் போட்டியில் செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா (Krystyna Pyszková) உலக அழகிப் பட்டத்தை வென்று மகுடம் சூடினார்.

Miss World 2024 title lifted by Krystyna Pyszkova Pooja Hegde to Kriti Sanon done ramp walk

இந்த நிகழ்ச்சியை பிரபல பாலிவுட் தயாரிப்பாளரான கரண் ஜோஹர் தொகுத்து வழங்கினார். பூஜா ஹெக்டே, க்ரித்தி சனோன் மற்றும் சோனாக்‌ஷி சின்ஹா உள்ளிட்ட இந்திய நடிகைகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்டவர்களை உற்சாகத்தில் ஆழ்த்தினர்.

உலக அழகி 2024 யாரு?: 72வது உலக அழகிப் போட்டி இந்த முறை இந்தியாவில் நடைபெறுகிறது என்றதுமே இந்தியா சார்பில் போட்டியிடும் சினி ஷெட்டி தான் தேர்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி சுற்றுக்கு அவர் தகுதியாகவில்லை. 130 நாட்களில் இருந்து அழகிகள் போட்டியிட்ட நிலையில், உலக அழகி 2024 என்கிற உன்னதமான பட்டத்தை செக் குடியரசு நாட்டைச் சேர்ந்த 24 வயதே ஆன அழகி கிறிஸ்டினா பிஸ்கோவா தட்டிச் சென்றார். அவருக்கு கடைசியாக 2021ம் ஆண்டு உலக அழகி பட்டத்தை வென்ற போலாந்து நாட்டு அழகி கரோலினா மகுடத்தை சூட்டினார்.

இரண்டாவது இடம் யாருக்கு: கடைசி 8 பேர் லிஸ்ட் வரை இந்தியாவின் சினி ஷெட்டி இருந்த நிலையில், எப்படியும் அவர் கடைசி சுற்றுக்கு முன்னேறி உலக அழகி பட்டத்தை வெல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் கடைசி சுற்றுக்கு முன்னேறவில்லை. முதல் இடத்தை கிறிஸ்டினா பிஸ்கோவா தட்டிச் சென்ற நிலையில், இரண்டாவது இடத்தை லெபனான் நாட்டை சேர்ந்த யாஸ்மினா ஸைத்தூன் வென்றார். அவருக்கு உலக அழகி ஆசியா பட்டமும் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Miss World 2024 title lifted by Krystyna Pyszkova Pooja Hegde to Kriti Sanon done ramp walk

பூஜா ஹெக்டே முதல் க்ரித்தி சனோன் வரை: மகா சிவராத்திரி தினத்தில் ஈஷா யோகா மையத்தில் தியானம் செய்துக் கொண்டிருந்த பூஜா ஹெக்டே நேற்று நடைபெற்ற உலக அழகிப் போட்டியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்கவர் உடையில் ராம்ப்வாக்கும் செய்தார். ஆதிபுருஷ் படத்தில் சீதையாக நடித்த பிரபல பாலிவுட் நடிகை க்ரித்தி சனோன் மற்றும் பிரபல பாலிவுட் நடிகை சோனாக்‌ஷி சின்ஹா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X