கமலின் பிறந்தநாளன்று இன்னொரு லெஜெண்ட்க்கு வாழ்த்து சொல்ல மறந்துட்டோம்

Yesterday everybody were busy wishing kaml hassan for his birthday. But forgot to wish another legendary person who celebrated his birthday yesterday. It is none other Venkat prabu.

சென்னை: நவம்பர் 7 உலகநாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாள் , இதையடுத்து சமூக வலைதளத்தில் எங்கு பார்த்தாலும் கமலை பற்றிய புகழே ஒலித்து கொண்டிருந்தது.

ஆனால் அதில் சிலர் மற்றொரு பிரபலத்திற்கும் வாழ்த்து சொல்லி கொண்டிருந்தனர் .அந்த பிரபலம் தான் நமது 'வெங்கட் பிரபு'.

Venkat prabu birthday1

இயக்குனர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என பல்வேறு கோணங்களில் பணியாற்றிய கங்கை அமரனின் மகன் தான் வெங்கட் பிரபு. இவருக்கும் நவம்பர் 7 தான் பிறந்த நாள் .

வெங்கட் பிரபுவும் நடிகர், பாடகர் ,இயக்குனர் ,தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர். தமிழ் சினிமாவில் 'ஏப்ரல் மாதத்தில்' படம் மூலம் நடிகராக அறிமுகமானார் வெங்கட் பிரபு . அதற்கு பிறகு பல படங்களில் நடித்து வந்த வெங்கட் பிரபு, சென்னை 28படம் மூலம் இயக்குனர் ஆனார். அந்த படம் மிக பெரிய வெற்றி அடைந்தது. அதை தொடர்ந்து சரோஜா , கோவா, மங்காத்தா, பிரியாணி, மாஸ், சென்னை28-2 போன்ற படங்களை இயக்கி இருந்தார்.

இவர் தல அஜித்தை வைத்து இயக்கிய மங்காத்தா படம் மாபெரும் வெற்றி அடைந்தது. அவர் முக்கிய இயக்குனர்கள் பட்டியலில் சேர்ந்தார்.

மங்காத்தா படத்தை பார்த்த தளபதி விஜய் பின்னாளில் வெங்கட் பிரபுவிடம் தன்னை மங்காத்தா படத்தில் அர்ஜீன் கதாபாத்திரத்துக்கு கூப்பிட்டு இருந்தால் கண்டிப்பாக நடித்திருப்பேன் என்று கூறினார். அது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

தற்போது வெங்கட் பிரபு பார்ட்டி என்ற படத்தை எடுத்து வருகிறார். அந்த படத்தை அம்மா கிரியேஷன் சார்பில் டி.சிவா தயாரித்து வருகிறார். அந்த படம் முடியும் தருவாயில் உள்ளது.

இதற்கடுத்து வெங்கட் பிரபு சிம்புவை வைத்து மாநாடு படத்தை இயக்குகிறார் அந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கும் சிம்புக்கும் இருந்த பிரச்சினை முடிவடைந்து தற்போது மீண்டும் படம் தொடங்க உள்ளது .இது வெங்கட் பிரபு ரசிகர்களையும் உற்சாகப்படுத்தி உள்ளது.

வெங்கட் பிரபு ஒரு கூல் மனிதர் . அவர் இன்றும் யூத் தான். அவர் மற்றவர்களை போல் அல்லாமல் ஒரு வித்யாசமான கதை அம்சம் கொண்டு படங்களை உருவாக்குபவர். வெங்கட் பிரபுவின் முக்கிய அம்சம் அவரது படங்களில் நண்பர்களுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பது. அது இளைஞர்களை பெரிதும் கவரும்.

தற்போது வைபவ் நடித்து வரும் லாக் அப் திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் ஒரு காவல் அதிகாரியாக நடித்துள்ளார் . இந்த பன்முகம் கொண்ட மனிதருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள். அவருக்கு மேலும் மேலும் பல வெற்றி படங்கள் அமைய வாழ்த்துக்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X