அஜித் மாதவன் நிலை என்ன? புர்ஜ் கலிஃபா அருகே தாக்குதல்.. மொத்தமாக இழுத்து மூடிய துபாய்.. பதறும் பிரபலம்

துபாய்: ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து கொண்டு வான் வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பல நாடுகள் உலக அளவில் கண்டனங்களை தெரிவித்து வருகிறது. இந்நிலையில் துபாய் அரசு நிர்வாகம் தனது கட்டுப்பாட்டில் உள்ள வான் வழித் தடத்தை மொத்தமாக மூடியது. இதனால் உலகம் முழுவதும் பல்லாயிரக்கணக்கான விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. இது மட்டும் இல்லாமல் துபாயில் உள்ள மக்களை எக்காரணம் கொண்டும் மறு அறிவிப்பு வரும் வரை யாரும் வெளியே வரவேண்டும் என்றும், அனைவரும் வீட்டுக்குள்ளேயே இருக்கும் உணவுப் பொருட்களை வைத்து மேனேஜ் செய்யுங்கள் என்று அறிவுறுத்தி உள்ளது.

இந்நிலையில் ப்ளூ சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் இது தொடர்பாக தெரிவித்துள்ள கருத்து பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது, " துபாயின் அத்தனை விமானங்களும் காலவரையின்றி கேன்சல் செய்யப்பட்டுள்ளது. பல நடிகர்கள் அஜித் , மாதவன் சிவகார்த்திகேயன், ஏ ஆர் ரகுமான், மம்முட்டி மற்றும் பலர் இங்கு வசித்துக் கொண்டிருக்கிறார்கள்" என்று பதிவிட்டுள்ளார். இவரது பதிவு பலருக்கும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.

Missile Strikes Reported Near Burj Khalifa Blue Sattai Maran ask Actor Ajith Madhavan Safe

ஏற்கனவே இந்தியாவில் இருந்து பல லட்சக்கணக்கான இந்திய மக்கள் அங்கு வேலைக்காக சென்றுள்ளார்கள். அதேபோல் பலரும் அங்கு தங்களுக்கு என்று வீடு கட்டி, வீடு வாங்கி குடியிருக்கிறார்கள். மேலும் பலர் ஹோட்டல் கட்டி நடத்தி வருகிறார்கள். பலர் பல வழிகளில் முதலீடு செய்துள்ளனர்.

நடிகர் அஜித்திற்கு அங்கு வீடு உள்ளது அனைவருக்கும் தெரிந்ததே. அதேபோல் நடிகர் மாதவனும் அங்குதான் தங்கியே உள்ளார். இது மட்டும் இல்லாமல் நடிகர் சிவகார்த்திகேயன் அங்கு தனக்கென இரண்டு வீடுகள் கட்டி வருகிறார் என்றும் சமீபத்தில் பேச்சுகள் எழுந்தது. இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, ஏ.ஆர். ரகுமான் போன்றவர்களுக்கும் அங்கு உடமைகள் உள்ளது என்று கூறப்படுகிறது. இப்படி இருக்கையில் நடிகர் அஜித், மாதவன் உள்ளிட்டோர் தற்போது அங்குதான் தங்கியும் உள்ளார்கள். ஈரான் மீது வான்வழித் தாக்குதல் நடத்தப்படுவதால் துபாயின் வான்வழியின் மூலமும் ஏவுகணைகள் பாய்ந்து வருவதையும் பார்க்க முடிகிறது என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்.

Missile Strikes Reported Near Burj Khalifa Blue Sattai Maran ask Actor Ajith Madhavan Safe

அதேபோல், ஈரானின் பதில் தாக்குதலின் போது, துபாயின் மிகவும் உயரிய கட்டிடமான புர்ஜ் கலிஃபாவுக்கு அருகிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோக்களும் வெளியாகி பலருக்கும் பதற்றத்தை உருவாக்கி உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X