சூட்டிங்கை ரொம்ப மிஸ் பண்றேன்... நிலைமை சரியாக பிரார்த்தனை செய்வோம்... சிம்ரன் உருக்கம்
சென்னை : நடிகை சிம்ரன் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து பிசியாக நடித்து வருகிறார்.
தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக சூட்டிங் இன்றி வீட்டில் முடங்கியுள்ளார்.
இந்நிலையில் சூட்டிங்கை மிகவும் மிஸ் செய்வதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

படங்களை ஹிட்டாக்கியவர்
90களின் கனவுக்கன்னி சிம்ரன் தன்னுடைய கேரியரில் கேப் இல்லாமல் அனைத்து ஹீரோக்களுடனும் போட்டிப் போட்டு நடித்தவர். ஏறக்குறைய தான் நடித்த அனைத்து படங்களையும் ஹிட்டாக்கியவர். அவருக்காக வெயிட் செய்து ஹீரோக்கள் படங்களை சைன் செய்த கதையும் நடந்தது.

வீட்டில் முடக்கம்
தற்போது திருமணமாகிய நிலையிலும் அவர் தொடர்ந்து சூப்பர்ஸ்டார் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்து வருகிறார். தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், சூட்டிங் இன்றி வீட்டில் முடங்கியுள்ளார். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்பு லாக்டவுன் செல்பீக்களையும் ட்விட்டரில் போஸ்ட் செய்திருந்தார்.

பிரார்த்தனை செய்வோம்
இந்நிலையில் தற்போது சூட்டிங்கை மிகவும் மிஸ் செய்வதாகவும் தற்போதைய கொரோனா சூழல் சரியாக பிரார்த்தனை செய்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். வீட்டில் வெறுமனே சும்மா இருப்பதன் கொடுமையை மற்றவர்களை போலவே அவரும் தொடர்ந்து அனுபவிப்பது இந்த ட்வீட் மூலம் தெரிகிறது.

ட்விட்டரில் தொடர் பதிவுகள்
மேலும் நடிகர் தியாகராஜனுடனும் தனித்தும் உள்ள புகைப்படங்களையும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். படங்களில் தொடர்ந்து நடித்து வந்தாலும் சமூக வலைதளங்களிலும் சிம்ரன் தொடர்ந்து ரசிகர்களுடன் டச்சில் உள்ளார். தொடர்ந்து பல்வேறு பதிவுகளை பதிவிட்டு வருகிறார்.


Click it and Unblock the Notifications











