மிஷன் இம்பாசிபிள் 7 படத்தில் நடிக்கிறாரா பிரபாஸ்? டாம் க்ரூஸ் பட இயக்குநரின் பதிலை பாருங்க!

சென்னை: டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிபிள் 7 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பிரபாஸ் நடிக்கப் போவதாக தகவல்கள் வைரலாகின.

இந்நிலையில், அதுதொடர்பாக அந்த படத்தின் இயக்குநரே பதிவிட்டுள்ள ட்வீட் ரசிகர்களை மேலும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.

டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிபிள் படங்கள் அனைத்தும் உலகளவில் ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மிஷன் இம்பாசிபிள்

மிஷன் இம்பாசிபிள்

ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு இணையாக நடிகர் டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிபிள் படங்கள் உலகளவில் பிரபலமானவை. இதுவரை வெளியாகி உள்ள 6 பாகங்களுமே பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்துள்ளன. ஒவ்வொரு படத்திற்கும் நடிகர் டாம் க்ரூஸ் தனது உயிரை கொடுத்து உழைத்து வருகிறார்.

7வது பாகம்

7வது பாகம்

மிஷன் இம்பாசிபிள் 7 படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. சமீபத்தில் அந்த படத்திற்காக நடிகர் டாம் க்ரூஸ் செய்த பைக் சாகசம் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது. இதற்கு முன்னதாக ஹெலிகாப்டர், விமானம் என ஏகப்பட்ட ஸ்டன்ட்டுகளை டூப் இன்றி டாம் க்ரூஸே செய்து அசத்தி உள்ளார்.

விண்வெளியில் ஷூட்டிங்

விண்வெளியில் ஷூட்டிங்

டெஸ்லா நிறுவனர் எலன் மஸ்க்குடன் கைகோர்த்து விண்வெளியில் அடுத்த படத்தின் படப்பிடிப்பையும் நடத்தவும் நடிகர் டாம் க்ரூஸ் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகின. அந்த அளவுக்கு பிரம்மாண்டத்தை நாடி வரும் டாம் க்ரூஸின் படத்தில் நடிகர் பிரபாஸ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வைரலாகின.

டாம் க்ரூஸ் படத்தில் பிரபாஸ்

டாம் க்ரூஸ் படத்தில் பிரபாஸ்

ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் மிஷன் இம்பாசிபிள் படத்தில் நடிகர் பிரபாஸ் நடிக்க உள்ளதாக காட்டுத் தீ போல தகவல்கள் பரவிய நிலையில், அந்த படத்தை இயக்கி வரும் இயக்குநரே அதற்கு தற்போது பதில் அளித்துள்ளார்.

திறமையான நடிகர்

திறமையான நடிகர்

மிஷன் இம்பாசிபிள் படத்தை இயக்கி வரும் கிறிஸ்டோபர் மெக்கோரி தனது ட்விட்டர் பக்கத்தில், வைரலான வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நடிகர் பிரபாஸ் திறமையான நடிகர் என்றும், ஆனால், இந்த படம் தொடர்பாக அவரை இதுவரை சந்தித்தது இல்லை என்றும் கூறியுள்ளார்.

ரசிகர்கள் அப்செட்

ரசிகர்கள் அப்செட்

பாகுபலி, சாஹோ, சலார் என பிரம்மாண்ட படங்களில் நடித்து வரும் பிரபாஸ் டாம் க்ரூஸின் படத்தில் இடம்பெறாத செய்தியை அறிந்த பிரபாஸ் ரசிகர்கள் மிகவும் அப்செட் ஆகி உள்ளனர். மேலும், எதிர்காலத்தில் அவரை சந்திக்க வேண்டும் என்றும், டாம் க்ரூஸ் படத்தில் நடிக்க தகுதியானவர் பிரபாஸ் என்றும் ரசிகர்கள் இயக்குநரின் ட்வீட்டுக்கு கீழே கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

இந்திய நடிகர்

இந்திய நடிகர்

கடந்த 2011ம் ஆண்டு வெளியான டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிபிள் கோஸ்ட் ப்ரோட்டக்கால் படத்தில் இந்திய நடிகர் அனில் கபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்நிலையில், நடிகர் பிரபாஸ் நடிப்பதாக பரவிய வதந்தியை ரசிகர்கள் பலரும் நம்பிய நிலையில், இயக்குநரின் இந்த விளக்கத்தால் பலரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X