மீண்டும் பரவிய கொரோனா வைரஸ்.. அதிரடியாக நிறுத்தப்பட்ட டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிபிள் படப்பிடிப்பு!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸின் மிஷன் இம்பாசிபிள் 7 படத்தின் படப்பிடிப்பு கொரோனா பரவல் காரணமாக அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் சூழலில் நடிகர் டாம் க்ரூஸின் பிரம்மாண்ட படத்தின் ஷூட்டிங் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், அந்த படப்பிடிப்பு தளத்தில் பணியாற்றி வந்த சில ஊழியர்களுக்கு கொரோனா பரவியதை தொடர்ந்து அதன் படப்பிடிப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டும் இதே போல மிஷன் இம்பாசிபிள் படத்தின் படப்பிடிப்பில் பணியாற்றிய ஊழியர்கள் சிலருக்கு கொரோனா பரவியது.

கோபத்தில் டாம் க்ரூஸ்

கோபத்தில் டாம் க்ரூஸ்

அதனை தொடர்ந்து பல மாதங்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கடந்த டிசம்பர் மாதம் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கிய போது, நடிகர் டாம் க்ரூஸ் ஆவேசமாக கொரோனா விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பேசிய ஆடியோ ஒன்று லீக்காகி வைரலானது.

மீண்டும் கொரோனா

மீண்டும் கொரோனா

இந்நிலையில், மீண்டும் சிலருக்கு கொரோனா பரவி உள்ளதாக பாராமவுண்ட் பிக்சர்ஸ் தெரிவித்துள்ளது. அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைபிடித்தே படப்பிடிப்பை நடத்தியதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால், யாருக்கு என்றும் எத்தனை பேருக்கு என்றும் எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை.

காலதாமதம்

காலதாமதம்

டாம் க்ரூஸ் நடிப்பில் உருவாகி வரும் மிஷம் இம்பாசிபிள் 7 படம் அடுத்த ஆண்டு ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தொடர்ந்து இதே போன்று கொரோனா பாதிப்பு காரணமாக படப்பிடிப்பு நடத்த முடியாமல் போனால், திட்டமிட்டபடி ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்படும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

டாம் க்ரூஸ் அப்செட்

டாம் க்ரூஸ் அப்செட்

பல கோடி ரூபாய்களை கொட்டி பிரம்மாண்டமாக எடுத்து வரும் பல ஹாலிவுட் படங்களின் படப்பிடிப்புகள் இதே போல கொரோனா பரவல் காரணமாக் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும், எடுத்து முடித்த படங்களும் உலகம் முழுவதிலும் ரிலீஸ் செய்ய முடியாமல் காத்திருக்கின்றன. இந்நிலையில், மீண்டும் மிஷம் இம்பாசிபிள் குழுவினருக்கு கொரோனா பரவிய தகவலை அறிந்த டாம் க்ரூஸ் கடும் அப்செட்டில் உள்ளாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X