Mission Impossible: ஒரு சாவி இங்க இருக்கு இன்னொன்னு எங்க..? மிஷன் இம்பாசிபிள் ப்ளூ சட்டை விமர்சனம்
சென்னை: டாம் குரூஸ் நடித்துள்ள மிஷன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங் ஜூலை 12ம் தேதி ரிலீஸாகிறது.
மிஷன் இம்பாசிபிள் சீரிஸின் 7வது பாகமாக உருவாகியுள்ள இதன் ஸ்பெஷல் ஸ்க்ரீனிங் நேற்று திரையிடப்பட்டது.
இந்தப் படமும் டாம் குரூஸின் அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் மிரட்டியுள்ளதாக விமர்சனங்கள் வெளியாகி வருகின்றன.
அதேபோல், இப்படத்திற்கான ப்ளூ சட்டை மாறன் விமர்சனமும் தற்போது வெளியாகியுள்ளது.

மிஷன் இம்பாசிபிள் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்:ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் குரூஸ் நடித்துள்ள மிஷன் இம்பாசிபிள் டெட் ரெக்கனிங் பார்ட் 1 வரும் 12ம் தேதி வெளியாகிறது. இப்படத்தின் ட்ரெய்லர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. அதனால், மிஷன் இம்பாசிபிள் படத்தின் டிக்கெட் புக்கிங் தற்போது வேகமெடுத்துள்ளது. இதனிடையே இப்படத்திற்கான ஸ்பெஷல் ஸ்க்ரீனிங் நேற்று சென்னையில் திரையிடப்பட்டது.
இதனையடுத்து மிஷன் இம்பாசிபிள் படத்திற்கு ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார். அதில் ஆக்ஷன் பட ரசிகர்களுக்கு மிஷன் இம்பாசிபிள் ஒர்த்தான படம் தான் என்று கூறியுள்ளார். மேலும், இப்படத்தின் பாசிட்டிவ், நெகட்டிவ் அம்சங்களையும் முழுமையாக விமர்சித்துள்ளார். அதாவது மிஷன் இம்பாசிபிள் படத்தின் கதை, உலகத்தை காப்பாற்றுவதற்காக ஹீரோ ஒரு சாவியை கண்டுபிடிப்பது தான். ஆனால், அதில் டாம் குரூஸ்ஸின் லைவ் ஆக்ஷன் தான் உயிர் கொடுத்துள்ளது என்றுள்ளார்.
படத்தின் ஆரம்பத்தில் ஒரு சாவியை காட்டும் இயக்குநர், அதேபோல் இருக்கும் இன்னொரு சாவியை கண்டுபிடிக்க ஹீரோ டாம் குரூஸ்ஸை களமிறக்குகிறார். அந்த சாவியும் கிடைத்துவிட்டால் என்ன நடக்கும் என்பதுதான் கதை. ஆனால், இது மிக சாதாரண கதை தான் என்றாலும், ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களை பூர்த்தி செய்துள்ளது. அதேபோல், இப்படத்தில் கம்ப்யூட்டர் தான் வில்லன் எனவும், அதனை வைத்து திரைக்கதையை சுவாரஸ்யமாக இயக்குநர் உருவாக்கியுள்ளார்.

அதேபோல், படத்தில் செட் ஒர்க் மிக பிரமாதமாக இருப்பதாகவும், அதனையும் டாம் குரூஸின் ஆக்ஷனையும் விஷுவலாக செம்மையாக எடுத்துள்ளனர் எனக் கூறியுள்ளார். சில ஹாலிவுட் படங்களை நினைவுப்படுத்தும் மிஷன் இம்பாசிபிள், இரண்டாம் பாதியில் மட்டும் கொஞ்சம் போர் அடிக்கிறது எனக் கூறியுள்ளார். மேலும், படத்தில் ஆம்பளையாக யார் வந்தாலும் அடித்து நொறுக்கிவிடும் டாம் குரூஸ், பெண்களைப் பார்த்தால் மட்டும் எம்ஜிஆர் போல மன்னித்துவிட்டுவிடுவார்.
பண்பாடு, கலாச்சாரத்தில் எம்ஜிஆருக்கே டஃப் கொடுத்துள்ள டாம் குரூஸ், ஆக்ஷன் காட்சிகளில் மட்டும் அதகளம் செய்துள்ளதாக ப்ளூ சட்டை மாறன் விமர்சித்துள்ளார். முக்கியமாக டாம் குருஸ் மலை உச்சியில் இருந்து பைக்கில் குதிக்கும் காட்சி மிரட்டல் எனவும் புகழ்ந்துள்ளார். நல்ல சவுண்ட் எஃபெக்ட் உள்ள தியேட்டரில் மிஷன் இம்பாசிபிள் படத்தை பார்க்கலாம் எனவும் ப்ளூ சட்டை மாறன் கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











