twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மூளையில் கட்டி... பிரபல இயக்குனர் மருத்துவமனையில் அட்மிட்... தீவிர சிகிச்சையில் மருத்துவர்கள்

    By
    |

    மும்பை: மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக, பிரபல இயக்குனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சீரியஸாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

    வித்யாபாலன், ஆக்‌ஷய்குமார், சோனாக்‌ஷி சின்ஹா, டாப்ஸி, நித்யா மேனன், கிரித்தி குல்ஹாரி உட்பட பலர் நடித்த இந்தி படம் மிஷன் மங்கள்.

    இந்திய வரலாற்றில் 'மங்கள்யான்' விண்ணில் செலுத்தப்பட்டது முக்கியமான நிகழ்வு. அதை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட படம் இது.

    ஜெகன் சக்தி

    ஜெகன் சக்தி

    தமிழகத்தைச் சேர்ந்த ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருந்தார். கடந்த வருடம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான இந்தப் படத்தை ஜெகன் சக்தி இயக்கி இருந்தார். இவர் சீனிகம், ஷிமிதாப் உட்பட சில படங்களை இயக்கிய ஆர்.பால்கியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இந்தப் படம் ஹிட்டானதை அடுத்து கவனிக்கப்பட்டார்.

    கத்தி ரீமேக்

    கத்தி ரீமேக்

    அடுத்து தமிழில் ஹிட்டான கத்தி படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இருந்தார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா, நீல் நிதின் முகேஷ் நடித்த படம் கத்தி. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதன் தெலுங்கு ரீமேக்கில் விஜய் கேரக்டரில் சிரஞ்சீவி நடித்தார். அங்கும் இந்த படம் ஹிட்டானது.

    தள்ளிப் போனது

    தள்ளிப் போனது

    இந்தியில் விஜய் நடித்த கேரக்டரில் அக்‌ஷய்குமார் நடிக்க இருந்தார். சில காரணங்களால் இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிப் போனது. இதனால் அடுத்த படத்துக்கான வேலையில் இருந்தார், இயக்குனர் ஜெகன் சக்தி. இந்நிலையில் அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு மூளையில் கட்டி இருப்பதை அறிந்தனர்.

    தீவிர சிகிச்சை

    தீவிர சிகிச்சை

    மிகவும் சீரியசான நிலையில் இருக்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. விஷயம் அறிந்து அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். இளம் இயக்குனர் ஒருவருக்கு இப்படி ஆகியிருப்பது இந்தி திரையிலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைவில் குணமாக பிரார்த்தித்து வருகின்றனர்.

    English summary
    Jagan Shakti, who made his directorial debut with Akshay Kumar, Vidya Balan, Sonakshi Sinha, Taapsee Pannu and Sharman Joshi's Mission Mangal, has been hospitalised after being diagnosed with a clot in his brain
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X