Don't Miss!
- Finance தங்கம் விலை இன்று வரலாற்று உச்சம் தொட்டது.. மீண்டும் மீண்டுமா.. எப்போதுதான் தங்கம் வாங்க முடியும்?
- News தமிழக போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் ஐஏஎஸ் சென்னை போலீசில் பரபரப்பு புகார்
- Technology பூமிக்கு கடைசி மெசேஜ்.. Mars-இல் இருந்து வந்த "குட்பை".. அசைவின்றி கிடக்கும் ஏர்கிராப்ட்.. 72 முறை நடந்தது!
- Sports PBKS vs MI : பும்ரா பந்தில் அடித்த அந்த சிக்ஸ்.. எனது ரொம்ப நாள் ஆசை.. ஓபனாக சொன்ன அஷுதோஷ் சர்மா!
- Lifestyle சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: ஏப்ரல் 25 முதல் அடுத்த 10 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப் போகுது.
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
மூளையில் கட்டி... பிரபல இயக்குனர் மருத்துவமனையில் அட்மிட்... தீவிர சிகிச்சையில் மருத்துவர்கள்
மும்பை: மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக, பிரபல இயக்குனர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் சீரியஸாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
வித்யாபாலன், ஆக்ஷய்குமார், சோனாக்ஷி சின்ஹா, டாப்ஸி, நித்யா மேனன், கிரித்தி குல்ஹாரி உட்பட பலர் நடித்த இந்தி படம் மிஷன் மங்கள்.
இந்திய வரலாற்றில் 'மங்கள்யான்' விண்ணில் செலுத்தப்பட்டது முக்கியமான நிகழ்வு. அதை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட படம் இது.
ஜெகன் சக்தி
தமிழகத்தைச் சேர்ந்த ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்திருந்தார். கடந்த வருடம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியான இந்தப் படத்தை ஜெகன் சக்தி இயக்கி இருந்தார். இவர் சீனிகம், ஷிமிதாப் உட்பட சில படங்களை இயக்கிய ஆர்.பால்கியிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். இந்தப் படம் ஹிட்டானதை அடுத்து கவனிக்கப்பட்டார்.
கத்தி ரீமேக்
அடுத்து தமிழில் ஹிட்டான கத்தி படத்தை இந்தியில் ரீமேக் செய்ய இருந்தார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா, நீல் நிதின் முகேஷ் நடித்த படம் கத்தி. இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இதன் தெலுங்கு ரீமேக்கில் விஜய் கேரக்டரில் சிரஞ்சீவி நடித்தார். அங்கும் இந்த படம் ஹிட்டானது.
தள்ளிப் போனது
இந்தியில் விஜய் நடித்த கேரக்டரில் அக்ஷய்குமார் நடிக்க இருந்தார். சில காரணங்களால் இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிப் போனது. இதனால் அடுத்த படத்துக்கான வேலையில் இருந்தார், இயக்குனர் ஜெகன் சக்தி. இந்நிலையில் அவருக்கு திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதித்த டாக்டர்கள் அவருக்கு மூளையில் கட்டி இருப்பதை அறிந்தனர்.
தீவிர சிகிச்சை
மிகவும் சீரியசான நிலையில் இருக்கும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. விஷயம் அறிந்து அவரது உறவினர்கள் மருத்துவமனைக்கு விரைந்துள்ளனர். இளம் இயக்குனர் ஒருவருக்கு இப்படி ஆகியிருப்பது இந்தி திரையிலகினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர் விரைவில் குணமாக பிரார்த்தித்து வருகின்றனர்.