twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மங்கள்யான் வெற்றியின் கதை மிஷன் மங்கள் - இயக்குநர் ஜெகன் சக்தி

    |

    சென்னை: மிஷன் மங்கள் படம் இஸ்ரோ வெற்றி கண்ட மங்கள்யான் பற்றியது. இந்த பணி ஒரு கூட்டு முயற்சியில் கிடைத்த வெற்றியாகும், மேலும் அதன் வெற்றி அனைவருடைய வெற்றி என்பதால் இந்தப் படம் சுயசரிதையாக மாறவில்லை என இயக்குநர் ஜெகன் கூறியுள்ளார்.

    ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ், கேப் ஆஃப் குட் பிலிம்ஸ் மற்றும் ஹோப் புரொடக்சன்ஸ் தயாரப்பில் அக்ஷய் குமார் மற்றும் வித்யா பாலன் முன்னனி பாத்திரங்களில் நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் மிஷன் மங்கள்

    Mission Mangal is a joint effort-Director Jagan Shakti

    செவ்வாய் கிரக சுற்றுப்பாதையில் பங்களித்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் விஞ்ஞானிகளின் கதையை அடிப்படையாகக் கொண்ட உருவாக்கப்பட்டது இந்த படம். இந்தியாவின் முதல் கிரக பயணத்தை குறிக்கும் மிஷன் பற்றியது.

    இந்தப் திரைப்படத்தின் படப்பிடிப்புக்காக இந்தியாவின் விண்வெளி ஏஜென்சியுடன் இணைந்து பணியாற்றுயது குறித்து மிஷன் மங்கள் இயக்குனர் ஜெகன் சக்தி விவரித்துள்ளார்.

    அறிமுக இயக்குனர் ஒருவர், செவ்வாய் சுற்றுக்கலன் திட்டத்தை (Mars Orbiter Mission) அடிப்படையாகக் கொண்ட ஒரு திரைப்படத்தை இயக்குவது எளிதல்ல, இன்றுவரை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (இஸ்ரோ) மிகவும் முக்கியமான ஒரு திட்டமாகும்.

    Mission Mangal is a joint effort-Director Jagan Shakti

    ஜெகன் சக்தி தகுதியான கலைஞர்களைக் கொண்டு இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார் இதில் அக்ஷய் குமார், வித்யா பாலன், டாப்ஸி பன்னு, சோனாக்ஷி சின்ஹா, நித்யா மேனன், கீர்த்தி குல்ஹாரி மற்றும் ஷர்மன் ஜோஷி என திறமை வாய்ந்த நட்சத்திரங்கள் பட்டாளங்கள் இணைந்துள்ளனர். ஜெகன் சக்தி இந்த படத்தை இயக்க உறுதுணையாக இருந்த இந்தியாவின் முதன்மை விண்வெளி ஏஜென்சி உறுப்பினர்களையும் பாராட்டியுள்ளார்.

    இந்தப் படத்தைப் பற்றி இயக்குநர் ஜெகன் சக்தி கூறுகையில், என் சகோதரி சுஜாதா [கிருஷ்ணா] அங்கு பணிபுரிகிறார், எனவே மங்கள்யான் மிஷன் குழுவுடன் விரிவான நேர்காணல்களைச் செய்ய முடிந்தது. இந்தப் படத்திற்கு தேவையான அனைத்து உதவிகள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு அணுகலை வழங்குவதில் இஸ்ரோ மிகவும் உதவியாக இருந்தது.

    மறுபுறம் கலை இயக்குனர் மற்றும் வி.எஃப்.எக்ஸ் குழு, படத்தின் மிக முக்கியமான அங்கமாக இருந்த ராக்கெட்டை வடிவமைக்க எங்களுக்கு உதவினர். எங்களிடம் சரியான வரைபடங்கள் இருந்தாலும் கூட, அச்சு அசலாய் இதேபோன்ற தோற்றமுடைய சாதனத்தை அவர்கள் இல்லாமல் எங்களால் நிச்சயமாய் வடிவமைத்திருக்க முடியாது.

    படப்பிடிப்பின் போது நேர்ந்த சவால்களை பற்றி இயக்குநர் ஜெகன் விவரிக்கையில், நாங்கள் பெங்களுரூவில் இருக்கும் இஸ்ரோ வளாகத்தில் படப்பிடிப்பு நடத்த ஆர்வமாக இருந்தோம். ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக முடியாமல் போனது. அதே சமயம், பணி குறித்த முக்கிய குறிப்புகள் பெரும்பாலானவை வலைத்தளங்களில் கிடைக்கின்றன.

    இறுதியில், நாங்கள் இந்த திரைப்படத்தை மிகவும் நன்றாக இயக்கியுள்ளோம். நடைமுறை வாழ்க்கையில் எளிமையாக வாழும் சாதாரண ஆண்களும் பெண்களும் எப்படி அசாதாரணமானவர்களாக இருக்கிறார்கள் என்பது பற்றிய கதை இது. இந்த மிஷன் மங்கள் படம் இஸ்ரோ வெற்றி கண்ட மங்கல்யான் பற்றியது. இந்த பணி ஒரு கூட்டு முயற்சியில் கிடைத்த வெற்றியாகும், மேலும் அதன் வெற்றி அனைவருடைய வெற்றி என்பதால் இந்தப் படம் சுயசரிதையாக மாறவில்லை என ஜெகன் விவரித்தார்.

    மிஷன் மங்கள் என்பது செவ்வாய் கிரக ஆராய்ச்சிக்காக இந்தியாவால் அனுப்பப்பட்ட முதல் செவ்வாய் ஆர்பிட்டர் மிஷன். இது உலக அளவில் பாராட்டப்பட்ட ஒரு சாதனை. மேலும் அது, அதனுடைய முதல் முயற்சியிலேயே வெற்றியைப் பெற்றது.

    ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் கேப் ஆஃப் குட் ஃபிலிம்ஸ் மற்றும் ஹோப் புரொடக்சன்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. எழுத்து மற்றும் கிரியேட்டிவ் இயக்குநர் ஆர்.பால்கி. இசையமைப்பு அமித் திரிவேதி, ஒளிப்பதிவு ரவி வர்மன், படத் தொகுப்பு சந்தன் அரோரா. இந்த படம் சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 அன்று வெளியாகிறது. இந்தி மொழியில் வெளிவர இருக்கும் இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் வெளியாக இருக்கிறது.

    English summary
    Mission Mangal is a story about how ordinary men and women who live simple in practical life are uncommon, said Director Jagan Shakti.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X