twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    வசூலை அள்ளும் மிஷன் மங்கள் - 2019ம் ஆண்டு தேசிய விருதுகளை அள்ளப்போகும் தமிழர்கள்

    |

    சென்னை: 2018ஆம் ஆண்டின் சிறந்த படங்களுக்கான தேசிய விருதுகளைப் பெற முடியாமல் போனாலும் 2019ஆம் ஆண்டு மிஷன் மங்கள் படத்துக்காக நிச்சயமாக மூன்று விருதுகள் கிடைக்கும் என்று திரைத்துறையினர் அடித்துச் சொல்கின்றனர்.

    இப்படத்தின் இயக்குனர் ஜெகன்சக்தி, பால்கி திரைக்கதை ஆக்கத்தில் பங்கேற்றவர். படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளவர் ரவி வர்மன். இவர்கள் அனைவரும் யார் என்று தெரியுமா. நம்ம தமிழ்நாட்டுகாரங்க தான் பாஸ். காவிரி பாயும் தஞ்சையை சேர்ந்தவர் தான் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், சங்கத் தமிழ் வளர்த்த மதுரையைச் சேர்ந்தவர்தான் பால்கி. நமது இயக்குனர் ஜெகன்சக்தி வேலூர்காரர்.

    கடந்த ஆண்டுக்கான தேசிய விருது பெற்றவர்களில் சிறந்த சண்டை அமைப்பு மற்றும் சிறந்த ஸ்பெஷல் எஃபெக்ட் ஆகிய பிரிவுகளில் தமிழர்கள் விருது பெற்றாலும் கூட அவை அனைத்தும் பிற மொழி படங்களுக்காகவே கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

    தமிழ் படத்துக்கு கெட் அவுட்டா

    தமிழ் படத்துக்கு கெட் அவுட்டா

    2018ம் ஆண்டிற்கான 66வது தேசிய விருது பெறும் வெற்றியாளர்களின் பட்டியல் சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது. இதில் தெலுங்கு, கன்னடம் போன்ற மற்ற மொழி படங்களுக்கு தேசிய விருது கிடைத்ததில் மகிழ்ச்சி என்றாலும் நம் தமிழ் திரையுலகிலும் தரமான படங்கள் வெளிவந்தாலும் அவை எதற்கும் தேசிய விருது கிடைக்கவில்லையே என்பது ஆதங்கமாகவே உள்ளது. பலர் கோபத்திலும் உள்ளனர். அப்படியென்றால் உங்களுக்கு ஒரு நற்செய்தி. அடுத்த ஆண்டு தமிழர்களாகிய நாம் நெஞ்சை நிமிர்த்தி கொள்ளலாம். எப்படி என்ற கேள்வி பலரிடம் எழும்பும்.

    சாதனை படைத்த மிஷன் மங்கள்

    சாதனை படைத்த மிஷன் மங்கள்

    ஆகஸ்ட் 15 ம் தேதி அன்று மிஷன் மங்கள் எனும் இந்தி படம் வெளியாகி முதல் நாளிலேயே சக்கை போடு போட்டு சாதனை படைத்துள்ளது. இப்படம் நிச்சயம் பல பிரிவுகளில் பல தேசிய விருதுகளை அள்ளிக்கொள்ளபோகிறது. இந்தி படம் தேசிய விருது பெற்றால் நாம் எப்படி பெருமை கொள்வோம் என்று நீங்கள் கோபத்தோடு முறைப்பது எனக்கு தெரிகிறது. பொறுங்கள்! பொறுங்கள்.

    செவ்வாய் ஆர்பிட்டர் மிஷன்

    செவ்வாய் ஆர்பிட்டர் மிஷன்

    மிஷன் மங்கள் எனும் இந்த ஹிந்தி படம் ஒரு ஆராய்ச்சிக்காக இந்தியாவால் செவ்வாய் கிரஹத்திற்கு அனுப்பப்படும் முதல் செவ்வாய் ஆர்பிட்டர் மிஷன். முதல் முயற்சியிலேயே மாபெரும் வெற்றியடைந்து உலக அளவில் பாராட்டை பெற்று சாதனை படைத்தது. அதை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்ட படம் தான் மிஷன் மங்கள்.

    எல்லாம் நம்மாளுங்கதான்

    எல்லாம் நம்மாளுங்கதான்

    இப்படத்தின் இயக்குனர் ஜெகன் சக்தி, பால்கி திரைக்கதை ஆக்கத்தில் பங்கேற்றவர். படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளவர் ரவி வர்மன். இவர்கள் அனைவரும் யார் தெரியுமா. நம்ம தமிழ்நாட்டுகாரங்க தான் பாஸ். காவிரி பாயும் தஞ்சையை சேர்ந்தவர் தான் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், சங்கத் தமிழ் வளர்த்த மதுரையைச் சேர்ந்தவர்தான் பால்கி. நமது இயக்குனர் ஜெகன்சக்தி வேலூர்காரர். இப்படம் உருவாக்கத்திலும் சுஜாதா, மயில்சாமி, அண்ணாதுரை போன்ற பல தமிழர்கள் பணியாற்றியுள்ளனர். படத்தின் முக்கிய பொறுப்புகளும் தமிழர்களிடமே கொடுக்கப்பட்டது சிறப்பு.

    முதல் நாளிலேயே சாதனை

    முதல் நாளிலேயே சாதனை

    35 கோடி ரூபாய் செலவில் 35 நாட்களில் தயாரான இப்படம் வெளியிடப்பட்ட முதல் நாளிலேயே அதிக வசூலை செய்து சாதனை படைத்துள்ளது. அக்ஷய்குமார், வித்யாபாலன், சோனாக்ஷி சின்ஹா, டாப்சி, நித்யாமேனன் போன்ற பல முன்னணி பாலிவுட் நடிகர்கள் நடித்துள்ளனர். படத்தில் நடிகர் அக்ஷய்குமார் விண்ணுலகில் இருக்கும் அப்துல்கலாமோடு போனில் தமிழில் உரையாடுவது சிறப்பாக படமாக்கப்பட்டிருந்தது.

    இதயத் துடிப்பு அதிகமாகும்

    இதயத் துடிப்பு அதிகமாகும்

    இப்படத்தின் மூலம் ராக்கெட் பற்றி அறியாத பாமரனும் கூட எளிதில் புரிந்து கொள்ளும் விதத்தில் அமைக்கப்பட்டிருப்பது இப்படத்தின் பிளஸ் பாயிண்ட். ராக்கெட்டை மேலே செலுத்தும் போது நம் இதய துடிப்பும் அதிகமாகுவது போல கட்சிதமாக காட்சி அமைத்திருக்கிறார் நமது ஒளிப்பதிவாளர். படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் சிறப்பாக தங்களது நடிப்பினை வெளிப்படுத்தியுள்ளனர்.

    தேசிய விருதுகள் நிச்சயம் உண்டு

    தேசிய விருதுகள் நிச்சயம் உண்டு

    இப்படத்தில் நடிகர்களை நன்றாக மெருகேற்றி அவர்களை சிறப்பாக இயக்கியுள்ளார் இயக்குநர் ஜெகன் சக்தி. இப்படம் தமிழ்த் திரையுலகிற்கு பெருமை சேர்த்துள்ளது என்றால் அது மிகையல்ல. தமிழர்களால் உருவாக்கப்பட்டு தரத்திலும், வசூலிலும் சாதனை படைத்துள்ள இந்த இந்தி படம் நிச்சயம் அடுத்த ஆண்டு சிறந்த ஒளிப்பதிவாளர், சிறந்த இயக்குனர் என பல தேசிய விருதுகளை அள்ளி செல்லும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    ஆர்வத்தை தூண்டும் படம்

    ஆர்வத்தை தூண்டும் படம்

    இது கண்டிப்பாக ஒவ்வொரு பள்ளி குழந்தையும் பார்க்க வேண்டிய படம். விண்கல சக்தியை தெரிந்து கொள்வதற்கும் அவர்களின் ஆர்வத்தை தூண்டுவதற்கும் ஏற்ற படம். இப்படி ஒரு படத்தை நம் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் உருவாக்கியதை எண்ணி நாம் பெருமிதம் கொள்வோம்.

    நேரில் சந்தித்து ஆசி

    நேரில் சந்தித்து ஆசி

    இப்படத்தின் வெற்றி குறித்து இயக்குனரிடம் பேசிய போது மிஷன் மங்கள் படத்தின் வெற்றியை தன் குடும்பத்தோடு கொண்டாடுவதற்காக பெங்களூர் சென்றுள்ளதாக தெரிவித்தார் இயக்குனர் ஜெகன்சக்தி. மேலும் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களுடைய நான்கு படங்களுக்கு துணை இயக்குனராக பண்ணியாற்றியுள்ள இவர் ஓரிரு நாட்களில் சென்னை திரும்பிய பிறகு தனது திரையுலக குருவாகிய ஏ.ஆர்.முருகதாஸ் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற உள்ளதாகவும் தெரிவித்தார்.

    English summary
    Even though last year's National Film Awards did not receive the National Film Award for Best Picture, next year's Mission Mangal film will surely win three awards.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X