டயட் காரணமாக சிறுநீரகப் பிரச்னை.. பிரபல இளம் நடிகை திடீர் மரணம்.. திரையுலகம் அதிர்ச்சி!
மும்பை: சிறுநீரகப் பிரச்னை காரணமாக நடிகை ஒருவர் திடீரென மரணம் அடைந்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கடந்த சில மாதங்களாக திரைத்துறையில் பலர் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர்.
கொரோனா லாக்டவுன் காரணமாக சிலர் தற்கொலை செய்து உயிரை மாய்த்துள்ளனர்.

மிஸ்டி முகர்ஜி
இந்நிலையில் பிரபல இளம் நடிகை மிஸ்டி முகர்ஜி, சிறுநீரகப் பிரச்னை காரணமாக உயிரிழந்துள்ளார். இந்தியில் லைஃப் கி தோ லக் கயி என்ற படம் மூலம் அறிமுகமானவர். மெய்ன் கிருஷ்ணா ஹுன், கோவிந்தா ஆலே ரே உள்பட சில படங்களில் நடித்துள்ளார். பெங்காலியிலும் சில படங்களில் நடித்திருப்பவர் இவர்.

இசை ஆல்பங்கள்
பல படங்களில் ஒரு பாடலுக்கும் ஆடி இருக்கிறார். இசை ஆல்பங்களிலும் பங்கேற்றுள்ளார். இவர் கடந்த சில மாதங்களாக கீட்டோ என்ற டயட் (keto diet) முறையை பின்பற்றி அதன்படி உணவு உண்டு வந்துள்ளார். இதில் அவருடைய கிட்னி கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இறுதிச்சடங்கு
இதையடுத்து பெங்களூரில் சிகிச்சைப் பெற்றுவந்த அவர் நேற்று முன் தினம் இரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 27. இதை அவர் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவருடைய இறுதிச்சடங்கு நேற்று நடந்துள்ளது. நடிகை மிஸ்டி முகர்ஜியின் மறைவு இந்தி திரையுலகினர் மத்தியில் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இவ்வளவு விரைவாக
நடிகை மிஸ்டி முகர்ஜி மறைவுக்கு பலர், சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்துள் ளனர். நடிகை காஷ்மீரா ஷா வெளியிட்டுள்ள இரங்கலில், இவ்வளவு விரைவாக சென்றுவிட்டாய். ரெஸ்ட் இன் பீஸ் என்று தெரிவித்துள்ளார். மேலும் பல நடிகைகளும் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இர்பான் கான்
கடந்த ஏப்ரல் மாதம் இந்தி நடிகர் இர்பான் கான், மரணமடைந்தார். மறுநாளே, இந்தி நடிகர் ரிஷி கபூர் மரணமடைந்தார். இது பாலிவுட்டில் சோகத்தை ஏற்படுத்தியது. பின்னர் சில சின்னத்திரை நடிகர்கள் தற்கொலை செய்துகொண்டனர். கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா மாரடைப்பால் மரணமடைந்தார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியம்
அடுத்து சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சி அடைய வைத்தது. கன்னட நடிகர் சிரஞ்சீவி சார்ஜா, மலையாள பட இயக்குனர் சச்சி, இயக்குனர் நிஷிகாந்த் காமத், தமிழில் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உள்பட பலர் உயிரிழந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











