படப்பிடிப்பில் திடீரென மயங்கி விழுந்த பிரபல நடிகர்.. படக்குழு அதிர்ச்சி.. ஷூட்டிங் கேன்சல்!

By

மும்பை: பிரபல மூத்த நடிகர் படப்பிடிப்பில் மயங்கி விழுந்ததால், படக்குழு அதிர்ச்சி அடைந்தது. இதனால் ஷூட்டிங் கேன்சல் செய்யப்பட்டது.

பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி. இவர், நடனம், ஆக்‌ஷன் காட்சிகளுக்காக ரசிகர்களால் அதிகம் ஈர்க்கப்பட்டவர்.

80 மற்றும் 90 களில் இந்தி சினிமாவில் ரசிகர்களிடம் செல்வாக்கு மிகுந்த ஹீரோவாக இருந்தவர்.

முதல் தமிழ்ப்படம்

முதல் தமிழ்ப்படம்

இந்தி தவிர, பெங்காலி, ஒரியா உட்பட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். தமிழில், ஆதி நடிப்பில் அவர் அண்ணன் சத்ய பிரபாஸ் இயக்கிய 'யாகாவாராயினும் நாகாக்க' என்ற படத்தில் மும்பை தாதா கேரக்டரில் நடித்திருந்தார். அவர் நடித்த முதல் தமிழ்ப் படம் இது.

ஊட்டியில் வசிக்கிறார்

ஊட்டியில் வசிக்கிறார்

இதில் நிக்கி கல்ராணி, பசுபதி உட்பட பலர் நடித்திருந்தனர். அதிகமான படங்களில் நடித்த நடிகர்கள் பட்டியலில் இவரும் இருக்கிறார். சுமார் 576 படங்களில் நடித்திருக்கிறார் மிதுன் சக்கரவர்த்தி. மும்பையில் இவருக்கு வீடு இருந்தாலும் ஊட்டியில்தான் பெரும்பாலும் வசித்து வருகிறார்.

காஷ்மீர் ஃபைல்ஸ்

காஷ்மீர் ஃபைல்ஸ்

இவர் இப்போது காஷ்மீர் ஃபைல்ஸ் என்ற இந்தி படத்தில் நடித்து வருகிறார். விவேக் அக்னி ஹோத்ரி இதை இயக்குகிறார். இதில் அனுபம் கெர், புனித் இஷார் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள முசோரியில் நவம்பர் மாதம் முதல் நடந்து வருகிறது.

மயங்கி விழுந்தார்

மயங்கி விழுந்தார்

அங்கு இப்போது ஆக்‌ஷன் காட்சி படமாக்கப்பட்டு வருகிறது. இதன் ஷூட்டிங்கில் கலந்துகொண்ட மிதுன் சக்கரவர்த்தி சில நாட்களுக்கு முன், படப்பிடிப்பில் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த படக்குழு, அவருக்கு முதல் உதவி அளித்தது. உணவு விஷமானதால் ஏற்பட்டப் பாதிப்பு காரணமாக மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது.

படப்பிடிப்பு நிறுத்தம்

படப்பிடிப்பு நிறுத்தம்

பின்னர் சிறுது நேரம் ஓய்வெடுத்த அவர், ஷூட்டிங் தடைபடக் கூடாது எனக் கூறி, மீண்டும் படப்பிடிப்பை தொடரச் சொன்னார். ஆனால், இயக்குனர் ஷூட்டிங்கை ஒரு நாள் நிறுத்தி, மறுநாள் தொடங்கினார். இதையடுத்து இயக்குனர் அக்னி ஹோத்ரி, மிதுனின் அர்ப்பணிப்பை பாராட்டித் தள்ளி இருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X