தந்தை மரணம்.. லாக்டவுனால் பெங்களூரில் சிக்கிய பிரபல நடிகர்.. இறுதிச்சடங்கில் பங்கேற்கத் தீவிரம்!

By

சென்னை: தனது தந்தையின் மரணத்தை அடுத்து, லாக்டவுனால் பெங்களூரில் சிக்கிக்கொண்ட நடிகர், மும்பை செல்வதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.

பிரபல இந்தி நடிகர் மிதுன் சக்கரவர்த்தி. ஸ்டைல் நடிகர் என்று கூறப்படும் இவர், நடனம், ஆக்‌ஷன் காட்சிகளுக்காக ரசிகர்களால் அதிகம் ஈர்க்கப்பட்டவர்.

80 மற்றும் 90 களில் இந்தி சினிமாவில் புகழ்பெற்ற ஹீரோவாக இருந்த இவர், இந்தி தவிர, பெங்காலி, ஒரியா உட்பட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார்.

யாகவாராயினும் நாகாக்க

யாகவாராயினும் நாகாக்க

தமிழில் ஆதி நடிப்பில் அவர் அண்ணன் சத்ய பிரபாஸ் இயக்கிய 'யாகவாராயினும் நாகாக்க' என்ற படத்தில் மும்பை தாதா கேரக்டரில் நடித்திருந்தார். அவர் நடித்த முதல் தமிழ்ப் படம் இதுதான். இதில் நிக்கி கல்ராணி, பசுபதி உட்பட பலர் நடித்திருந்தனர். அதிகமான படங்களில் நடித்த நடிகர்கள் பட்டியலில் இவரும் இருக்கிறார். சுமார் 576 படங்களில் நடித்திருக்கிறார்.

பிரமாண்ட பங்களா

பிரமாண்ட பங்களா

மும்பையில் இவருக்கு வீடு இருந்தாலும் ஊட்டியில்தான் இவர் வசித்து வருகிறார். இவருக்கு அங்கு பிரமாண்ட பங்களா இருக்கிறது. அங்கு ஓட்டலும் நடத்தி வருகிறார். ராஜ்யசபா எம்.பியாகவும் இருந்த மிதுன் சக்கரவர்த்தியின் தந்தை பெயர் பசந்த்குமார் சக்கரவர்த்தி. மும்பையில் வசித்து வந்த பசந்த்குமார், நீண்ட நாட்களாக வயது முதிர்வு மற்றும் சிறுநீரகப் பிரச்னை காரணமாக அவதிப்பட்டு வந்தார்.

இறுதிச்சடங்கு

இறுதிச்சடங்கு

அதற்கு சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் அவர் மும்பையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 95. இந்நிலையில், மிதுன் சக்கரவத்தி லாக்டவுன் காரணமாக பெங்களூரில் சிக்கிக்கொண்டார். ஒரு படப்பிடிப்புக்காக அங்கு வந்த அவர், திடீரென அறிவித்த லாக்டவுன் காரணமாக அங்கேயே தங்கிவிட்டார். இதனால், இந்த இக்கட்டானச் சூழலில் அவரால் தனது தந்தையின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இரங்கல்

இரங்கல்

இருந்தாலும் மும்பைக்கு செல்வதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மிதுனின் தாய் சாந்திமோயியும் மிதுனின் மூத்த மகன் மிமோ சக்கரவர்த்தியும் அங்கு இருப்பதாகவும் மிமோ, இறுதிச்சடங்குக்கான வேலைகளை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே, மறைந்த மிதுனின் தந்தஇ பசந்த்குமார் சக்கரவர்த்திக்கு ஏராளமான இந்தி பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X