கொஞ்சம்கூட பிசிறடிக்காம ஜெட் வேகத்துல போகுது முதல் பாதி.. ஆனாலும் டொக்கு.. நெட்டிசன்ஸ் ரிவ்யூஸ்!

Recommended Video

Darbar Public Opinion | Darbar Audience Review | Rajini | Nayanthara | Anirudh

சென்னை: ரஜினியின் தர்பார் படம் இன்று வெளியாகியுள்ள நிலையில் ரஜினி ரசிகர்கள் படம் குறித்த கருத்துக்களை டிவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

ரஜினிகாந்தின் 167வது படமான தர்பார் படம் இன்று ரிலீஸ் ஆகியிருக்கிறது. இந்தியாவில் மட்டும் 4 ஆயிரம் தியேட்டர்களில் ரிலீஸ் ஆகியுள்ளது தர்பார் படம்.

தமிழகத்தில் சென்னை, நெல்லை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகாலையிலேயே சிறப்பு காட்சியாக படம் வெளியானது. தர்பார் ரிலீஸை முன்னிட்டு திரையரங்குகள் விழாக்கோலம் கொண்டது.

தர்பார் படம்

தர்பார் படம்

இந்நிலையில் படம் குறித்த கருத்துக்களை நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதன்படி தர்பார் படம் குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இரண்டாம் பாதி

இதில் முதல் பாதி இந்த தலைமுறைக்கு பிடிக்கும் இரண்டாவது வகை பெரியவர்களுக்கு பிடிக்கும்.
அதனால் படத்தில் முதல் பாதி காட்சிகள் முதல் வகையையும் இரண்டாம் பாதி இரண்டாவது வகையையும் கொண்டிருக்கின்றன.
அதனால் அனைவருக்கும் பிடிக்கும் என்று கூறுகிறார் இவர்.

படம் பிளாக் பஸ்டர்

எதுக்கும் 10 பாட்டில் ஜெலுசில் ரெடியா வச்சுக்குங்க படம் பிளாக்பஸ்டர் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

பிச்சு எறிஞ்சுருக்காரு..

இந்த படத்தையாடா தடை பண்ண பாத்திங்க. இப்பதான் தியேட்டர விட்டு வரேன், நான் ஒரு தல பேன் ஆனா உண்மையிலயே தலைவர் 70 வயசுக்கான அடையாளமே இல்லாம டான்ஸ், ரொமான்ஸ்னு பிச்சு எறிஞ்சிருக்காருனே சொல்லலாம் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

தர்பார் பொங்கல்

இது உண்மையான #ரஜினிபொங்கல், தலைவரின் ப்யூர் #தர்பார்பொங்கல் படம் மாசுக்கெல்லாம் மாஸ்
அதுவும் மரணமாஸ்.. இனி எங்க ஆட்டம்..
இந்த ஆட்டம் போதுமா குழந்தை என்று கேட்கிறார் இந்த நெட்டிசன்.

புது ரெக்கார்டு

படம் பட்டாசா இருக்கு போல.. அப்போ வழக்கம் போல புது ரெகார்ட் அடிக்க போகுது... அடுத்து #Thalaivar168 இல்லனா #Master break பண்ணும் என்று கூறுகிறார் இவர்.

மறக்க மாட்டார்கள்

நிவேதா தாமஸ் அழ வச்சிட்டீங்க.. தலைவர் ரசிகர்கள் உங்கள மறக்க மாட்டார்கள் என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

போயிருவான்..

தலைவர் படம் வந்துட்டா போதும்
சின்ராச கையில பிடிக்க முடியாது ..FDFS போய்ருவான் என்கிறார் இவர்.

சின்ன சின்ன காமெடி

தலைவரோட காமெடிக்குனே என்ன மாதிரி அதிக ஃபேன்ஸ் இருப்பாங்க. இதுல அதிக காமெடி இல்லனாலும் நயன்தாரா கூட வர சீன்ல தலைவரோட சின்ன சின்ன காமெடியே சூப்பரா ரசிக்க வைக்குது என்று கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.

ஜெட் வேகத்துல..

கொஞ்சம்கூட பிசிறடிக்காம ஜெட் வேகத்துல போயிருக்கு பர்ஸ்ட் ஹாப் என்று கூறுகிறார் இவர்.

தலைவருக்கு அப்புறம்தான்

ஒரே குறை... நயன்தாரா அவ்வளவா வரல படத்தில. ஆனா தலைவர் படம்னா எல்லாரும் தலைவருக்கு அப்பறம் தான் என்று கூறுகிறார் இவர்.

வேற லெவல்மா

ஆடுனவன் எல்லாம் மூடிக்கோ இது #தலைவர் நேரம் ஓடிக்கோ.. படம் வேற வேற வேற லெவல்மா என்று கூறுகிறார் இந்த நெட்டிசன்.

படையப்பா உடம்பு..

இந்த சீன்ல தியேட்டரே அதிர்ந்துடுச்சி படையப்பா உடம்பை அப்படியே மெயின்டெய்ன் பண்றார் தலைவர்

கல்லா கட்டும்..

முதல் ஷோவே ஃபேமிலி ஆடியன்ஸ் தியேட்டர்ல தெரியுறாங்க. பொங்கல் லீவுல கண்டிப்பா படம் கல்லா கட்டும்.. என்கிறார் இந்த நெட்டிசன்.

வயசே ஆகாதா?

ஒவ்வொரு சீன்லயும் ரஜினி சார் 200% எனர்ஜியோட இருக்காங்க. சார் உங்களுக்கு வயசே ஆகாதா.. என்று கேட்கிறார் இவர்.

யோகி பாபு

தலைவர் நக்கல், கிண்டல், ஸ்டைலுனு வேற லெவல்ல கலக்கிருக்காரு. அனிருத் பிஜிஎம் & பாட்டு படத்தோட சேர்ந்து வருது. யோகி பாபு 'ஒன்லைனர்ஸ்' க்கு தியேட்டரே குலுங்குது. முதல் பாதி முழுசா தலைவருக்கு ஈக்வலா ஸ்பேஸ் இருக்கு யோகி பாபுவுக்கும்.. என்கிறார் இவர்.

கோயிலுக்கு போயிடலாம்..

முதல் பாதி ரஜினி படமாம்.. இரண்டாம் பாதி முருகதாஸ் படமாம்.. ரைட்டு.. டிக்கெட்ட ப்ளாக்ல வித்துட்டு கோவிலுக்கு போயிடலாம் ...
லெட்சுமி வண்டிய நேரா நம்ம கடைக்கு விடுடா என்கிறார்.

டொக்காயிட்டது...

ரஜினியை விடுங்க..அக்மார்க் ரசிகர்களுக்கு எப்படியும் பிடிக்கும்..அதிலும் வித்தியாச முயற்சி/மேக்கப் இல்லாத சண்டைகள் நிறைந்த மசாலாப்படம்..
முருகதாஸ் டொக்காயிட்டது உறுதியாயிடுச்சாமே.. என்று கூறுகிறார் இவர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X