ஆரம்பமே அட்டகாசம்! ஸ்ரீதேவி மகளுக்கு குவியும் பாராட்டுக்கள்!

Recommended Video

ஆரம்பமே அட்டகாசம்! ஸ்ரீதேவி மகளுக்கு குவியும் பாராட்டுக்கள்!- வீடியோ

மும்பை: பெரிதும் எதிர்பார்க்கபட்ட தடக் திரைப்படம் ரிலீஸ் ஆகியுள்ளது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூர் இத்திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

நாக்ராஜ் மஞ்சுலே இயக்கத்தில் ரிங்க்கு ராஜ்குரு, ஆகாஷ் தோசார் நடிப்பில் 2016 ஆம் ஆண்டு வெளியான மராத்தி திரைப்படம் சாய்ரத். சிறந்த காதல் திரைப்படமாக போற்றப்பட்ட அப்படம், மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது சாய்ரத் தடக் என்ற பெயரில் இந்தியில் ரீமேக் செய்யப்படுள்ளது.

Mixed response for Dhadak movie!

படத்தினுடைய டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ஜான்வி கபூரின் துரு துரு நடிப்பு பாராட்டைப் பெற்றது. அதனால் படத்தில் ஸ்ரீதேவியின் பெயரை நிச்சயம் காப்பாற்றுவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் ஜான்வி கபூர் நடித்திருப்பதாக விமர்சனம் எழுந்துள்ளது. ஜான்வி கபூர் மற்றும் இஷான் கட்டாரின் வெகுளித்தனமான நடிப்பு உங்களை கண்ணீரில் ஆழ்த்தும் என ட்வீட்களை பார்க்க முடிகிறது.

இஷான் கட்டாரும், ஜான்வி கபூரும் இந்த கதைக்கு மிகப் பொருத்தமானவர்கள் எனவும், நடிப்பு, பாட்டு, ரொமான்ஸ், டான்ஸ் என்று எந்த இடத்திலும் குறை சொல்ல முடியாத அளவுக்கு அற்புதமாக தங்கள் வேலையை செய்திருப்பதாக நெட்டிசன்கள் தெரிவிக்கின்றனர்.

அதே நேரத்தில், படத்தின் கதை மற்றும் திரைக்கதையில் சுவாராஸ்யம் இல்லை என்றும், முக்கியமான காட்சிகளில் காட்டப்படும் லொகேஷன்கள் எதும் பொருத்தமாகவே இல்லை என்கிறார்கள் விமர்சகர்கள். சாய்ரத் திரைப்படத்தின் அழகையே இயக்குனர் கெடுத்துவிட்டார் என்றும் சிலர் கொந்தளித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X