மம்முட்டிக்கு தங்கச்சியாக மியா ஜார்ஜ் - எந்த கேரக்டர்னாலும் பரவாயில்லையாம்!

By Vignesh Selvaraj

Recommended Video

மம்முட்டிக்கு தங்கச்சியாக மியா ஜார்ஜ் - எந்த கேரக்டர்னாலும் பரவாயில்லையாம்!- வீடியோ

கொச்சின் : மலையாள நடிகை மியா ஜார்ஜ் தமிழில், 'அமரகாவியம்' படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் விஷ்ணு விஷால் ஜோடியாக 'இன்று நேற்று நாளை' படத்தில் நடித்தார். பிறகு, 'வெற்றிவேல்', 'ஒரு நாள் கூத்து', 'ரம்', 'எமன்' ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.

மியா ஜார்ஜை பொறுத்தவரை ஹீரோயின் வேடம் தான் வேண்டும் என அடம் பிடிப்பதில்லை. எந்த கேரக்டர் என்றாலும் ஏற்று நடித்து வருகிறார். 'வெற்றிவேல்' படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக இரு நாயகிகளில் ஒருவராக நடித்தார்.

Miya george acts with mammootty

அந்தவகையில் கடந்த வருடம் மம்முட்டி நடித்த, 'தி கிரேட் பாதர்' மலையாளப் படத்தில் சினேகா கதாநாயகியாக நடித்தாலும் முக்கிய வேடத்தில் டாக்டராக நடித்தார் மியா. அதைத் தொடர்ந்து தற்போது மம்முட்டியின் 'பரோல்' படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து வருகிறார் மியா. இப்படி மம்முட்டி படங்களில் தொடர்ந்து இடம்பிடித்து வருகிறார் மியா.

'பரோல்' படத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக நடிகை இனியா நடிக்கிறார். மம்முட்டியின் இன்னொரு படமாக உருவாக இருக்கும் 'ஒரு குட்டநாடன் பிளாக்' படத்திலும் ராய் லட்சுமி கதாநாயகியாக நடிக்க முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் மியா ஜார்ஜ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X