Don't Miss!
- Lifestyle இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- Automobiles 5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
- Sports ஐதராபாத் ரசிகர்களுக்கு அதிர்ச்சி.. ஹெட், அபிஷேக் சர்மா சோலி முடிஞ்ச்.. நம்ம ஆர்சிபி பவுலிங்கா இது!
- News மற்றொரு "வேங்கைவயல்" சம்பவம்? குடிநீர் தொட்டியில் மாட்டு சாணம்? கந்தவர்கோட்டை அருகே பகீர்
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
தொழிலதிபருடன் நிச்சயதார்த்தம்.. தேவாலயத்தில் மோதிரம் மாற்றிய பிரபல நடிகை.. வைரலாகும் போட்டோ!
கொச்சி: பிரபல நடிகைக்கு தொழிலதிபருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அவர் மோதிரம் மாற்றிக்கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.
Recommended Video
கொரோனா லாக்டவுனில் பல சினிமா பிரபலங்கள் திருமணம் செய்துகொண்டனர். சிலர் தள்ளி வைத்துள்ளனர்.
தெலுங்கு நடிகர் நிதின் கடந்த சில மாதங்களுக்கு முன் ஐதராபாத்தில் திருமணம் செய்துகொண்டார்.
நடிகர் விஜயகாந்துக்கு இன்று பிறந்தநாள்.. ஊமை விழிகள் டு ரமணா.. அசர வைக்கும் அவரது டாப் 5 படங்கள்!
லாக்டவுன் திருமணம்
நடிகர் ராணா - மிஹீகா திருமணம் கடந்த 8 ஆம் தேதி ஐதராபாத்தில் எளிமையாக நடந்தது. மாமாங்கம் நடிகை பிராச்சி தெஹ்லான் திருமணம் டெல்லியில் நடந்தது. சில மலையாள நடிகர், நடிகைகளும் இந்த லாக்டவுனில் திருமணம் செய்துகொண்டனர். இந்நிலையில் நடிகை மியா ஜார்ஜூக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
டிரைவிங் லைசன்ஸ்
மலையாளத்தில் ஒரு ஸ்மால் ஃபேமிலி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் மியா ஜார்ஜ். பின்னர், மோகன்லால், பகத் பாசில் நடித்த ரெட் ஒயின்ஸ், பிருத்விராஜ் நடித்த மெமரீஸ், டிரைவிங் லைசன்ஸ், மோகன்லாலின் மிஸ்டர் பிராடு, மம்மூட்டியின் பரோல், உள்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
ஒரு நாள் கூத்து
ஜீவா சங்கர் இயக்கிய அமரகாவியம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார் மியா. இதில் சத்யா ஹீரோவாக நடித்தார். இதையடுத்து விஷ்ணு விஷால் நடித்த, இன்று நேற்று நாளை, சசிகுமாரின் வெற்றிவேல், தினேஷின், ஒரு நாள் கூத்து, விஜய் ஆண்டனியுடன் எமன் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இப்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார்.
மோதிரம் மாற்றினர்
இந்நிலையில், நடிகை மியா ஜார்ஜுக்கு திருமணம் பேசி முடிக்கப்பட்டு இருந்தது. அஸ்வின் பிலிப் என்ற தொழிலதிபரை அவர் திருமணம் செய்ய இருக்கிறார். லாக்டவுன் காரணமாக இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் குடும்பத்தார் முன்னிலையில் எளிமையாக, கடந்த சில மாதங்களுக்கு முன் நடந்தது. இந்நிலையில், கோட்டயம் மாவட்டத்திலுள்ள பாலா செயின்ட் தாமஸ் தேவாலயத்தில் இருவருக்கும் முறைப்படி நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டனர்.
திருமண தேதி
அஸ்வின் பிலிப்பும் மியாவும் மோதிரம் மாற்றும் வீடியோவை மியாவின் சகோதரி தனது யூடியூப் சேனலில் இப்போது வெளியிட்டுள்ளார். இது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இவர்கள் திருமணம் செப்டம்பரில் நடக்க இருப்பதாகக் கூறப்பட்டது. ஆனால் தேதி முடிவாகவில்லை. கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால் திருமணத்தை எப்போது நடத்துவது என்பது பற்றி குழப்பத்தில் இருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் மியா கூறியிருந்தார்.
-
அஜித் பிறந்தநாளுக்கு அல்லு அர்ஜுனின் தாறுமாறான ட்ரீட்.. புஷ்பா 2 ஃபர்ஸ்ட் சிங்கிள் அப்டேட் இதோ!
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!