லவ் மேரேஜ் இல்லையாம்.. வருங்கால கணவர் அஸ்வினுடன் நடிகை மியா ஜார்ஜ்..நிச்சயதார்த்த போட்டோ ரிலீஸ்!

By

சென்னை: நடிகை மியா ஜார்ஜின் திருமண நிச்சயதார்த்த புகைப்படம் வெளியாகி உள்ளது.

Recommended Video

Miya George Lock Down Wedding • Ashwin Philips, Vettrivel, Cobra, Vikram

மலையாளத்தில் ஒரு ஸ்மால் ஃபேமிலி என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மியா ஜார்ஜ்.

பின்னர், மோகன்லால், பகத் பாசில் நடித்த ரெட் ஒயின்ஸ், பிருத்விராஜ் நடித்த மெமரீஸ், மோகன்லாலின் மிஸ்டர் பிராடு, மம்மூட்டியின் பரோல், டிரைவிங் லைசன்ஸ் உட்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

ஒரு நாள் கூத்து

ஒரு நாள் கூத்து

பிருத்விராஜ், சுராஜ் வெஞ்சரமூடு ஆகியோருடன் நடித்த 'டிரைவிங் லைசென்ஸ்' படம் கடந்த வருடம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. ஜீவா சங்கர் இயக்கிய அமரகாவியம் படம் மூலம் தமிழுக்கு வந்தார் மியா . இதில் சத்யா ஹீரோவாக நடித்தார். இதையடுத்து விஷ்ணு விஷால் நடித்த, இன்று நேற்று நாளை, சசிகுமாரின் வெற்றிவேல், தினேஷின், ஒரு நாள் கூத்து, விஜய் ஆண்டனியுடன் எமன் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.

திருமண நிச்சயதார்த்தம்

திருமண நிச்சயதார்த்தம்

இப்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். மலையாளத்தில் கண்மணிலா, காளிதாஸ் ஹீரோவாக நடிக்கும் படம் என நடித்து வருகிறார். லாக்டவுன் காரணமாக இதன் படப்பிடிப்புகள் தடைபட்டுள்ளன. இந்நிலையில், நடிகை மியா ஜார்ஜுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.

நெருங்கிய சொந்தம்

நெருங்கிய சொந்தம்

அஸ்வின் பிலிப் என்பவரை அவர் திருமணம் செய்ய இருக்கிறார். லாக்டவுன் காரணமாக, நிச்சயதார்த்த விழாவில் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்துகொண்டனர். இவர்கள் திருமணம் செப்டம்பர் மாதம் கேரளாவில் நடக்கிறது. இந்நிலையில் நிச்சயதார்த்த புகைப்படங்களை மியா ஜார்ஜ் தரப்பில் வெளியிட்டுள்ளனர்.

யார் இந்த அஸ்வின்?

யார் இந்த அஸ்வின்?

இது காதல் திருமணம் இல்லையாம். மியாவுக்கு நிச்சயிக்கப்பட்டுள்ள அஸ்வின் பிலிப், கட்டுமான தொழில் செய்து வருகிறார். நிச்சயதார்த்த தேதி லாக்டவுக்கு முன்பே முடிவு செய்யப்பட்டிருந்ததால், அதைத் தள்ளிப்போட வேண்டாம் என்று மணமகன் வீட்டில் அதை எளிமையாக நடத்தியுள்ளனர். அதிகாரபூர்வமாக இன்னுமொரு முறை நிச்சயதார்த்தம் நடக்க இருக்கிறதாம்.

திருமணத்துக்குப் பின்

திருமணத்துக்குப் பின்

கொரோனா பிரச்னை முடிந்து இயல்பு நிலைக்குத் திரும்பினால், செப்டம்பர் மாதத்தில் திருமணம் நடக்கும் என்றும் இல்லை என்றால், டிசம்பரில் நடக்கலாம் என்றும் அவருக்கு வேண்டியவர்கள் தெரிவித்துள்ளனர். திருமணத்துக்குப் பிறகும் மியா நடிப்பாரா என்பது தெரியவில்லை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X