தேதி முடிவு பண்ணலை.. பிரபல நடிகைக்கு திருமணம்.. வைரலாகும் தோழிகள் கொடுத்த பார்ட்டி போட்டோஸ்!

By

கொச்சி: திருமணம் செய்துகொள்ள இருக்கும் பிரபல நடிகைக்கு அவர் தோழிகள், ஸ்பெஷல் பார்ட்டி கொடுத்துள்ளனர்.

அந்தப் புகைப்படங்களை அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் சகோதரியின் யூடியூப் சேனலில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இந்த போட்டோஸ் வைரலாகி வருகின்றன. ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

நடிகை மியா ஜார்ஜ்

நடிகை மியா ஜார்ஜ்

மலையாளத்தில் ஒரு ஸ்மால் ஃபேமிலி என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் மியா ஜார்ஜ். பின்னர், மோகன்லால், பகத் பாசில் நடித்த ரெட் ஒயின்ஸ், பிருத்விராஜ் நடித்த மெமரீஸ், டிரைவிங் லைசன்ஸ், மோகன்லாலின் மிஸ்டர் பிராடு, மம்மூட்டியின் பரோல், உள்பட பல படங்களில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

விக்ரமின் கோப்ரா

விக்ரமின் கோப்ரா

ஜீவா சங்கர் இயக்கிய அமரகாவியம் படம் மூலம் தமிழில் அறிமுகமானார் மியா. அடுத்து விஷ்ணு விஷால் நடித்த, இன்று நேற்று நாளை, சசிகுமாரின் வெற்றிவேல், தினேஷின், ஒரு நாள் கூத்து, விஜய் ஆண்டனியுடன் எமன் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இப்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார்.

தொழிலதிபர்

தொழிலதிபர்

நடிகை மியா, அஸ்வின் பிலிப் என்ற தொழிலதிபரை திருமணம் செய்ய இருக்கிறார். லாக்டவுன் காரணமாக இவர்கள் திருமண நிச்சயதார்த்தம் குடும்பத்தார் முன்னிலையில் எளிமையாக, நடந்தது. பின்னர், கோட்டயம் தேவாலயத்தில் முறைப்படி நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாயின.

கொரோனா பரவல்

கொரோனா பரவல்

இவர்கள் திருமணம் இந்த மாதம் நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. ஆனால் தேதி முடிவாகவில்லை. கொரோனா பரவல் தீவிரமடைந்து வருவதால் திருமணத்தை எப்போது, எப்படி நடத்துவது என்பது பற்றிய குழப்பத்தில் குடும்பத்தினர் இருப்பதாக, கடந்த சில நாட்களுக்கு முன் நடிகை மியா ஜார்ஜ் கூறியிருந்தார்.

தோழிகள் பார்ட்டி

தோழிகள் பார்ட்டி

இந்நிலையில் இவர் திருமணத்துக்காக, அவர் தோழிகள் இணைந்து பார்ட்டி கொடுத்துள்ளனர். பெண்கள் மட்டுமே கலந்துகொண்ட இந்த பார்ட்டியில், நடிகை மியாவுக்கு அவர்கள் பரிசுகளை கொடுத்து வாழ்த்தியுள்ளனர். அந்தப் புகைப்படங்களை மியா, தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

நீங்கள் அழகுதான்

நீங்கள் அழகுதான்

ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர். சிலர், மேக்கப் இல்லை என்றாலும் நீங்கள் அழகுதான், மேக்கப் இருந்தால் இன்னும் அழகு என்று கூறியுள்ளனர். இந்தப் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இந்த வீடியோவை நடிகை மியாவின் சகோதரி தனது யூடியூப் சேனலில் வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X