பிரம்மாண்டமாக நடைபெற்ற அர்ஜுன் மகள் ரிசப்ஷன்.. முதலமைச்சர் ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை பங்கேற்பு!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என பல பிரபலங்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் நடிகர் அர்ஜுன் தனது மகள் ஐஸ்வர்யா அர்ஜுனின் திருமணத்துக்காக அழைப்பு விடுத்திருந்த நிலையில், ஜூன் 10ம் தேதி அர்ஜுன் கட்டியுள்ள ஆஞ்சநேயர் கோயிலில் திருமணம் நடைபெற்றது.
சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் விஐபிகளுக்காக தனியாக லீலா பேலஸில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியை ஜூன் 14ம் தேதியான நேற்று இரவு அர்ஜுன் பிரம்மாண்டமான முறையில் நடத்தினார். அந்த திருமண வரவேற்பு நிகழ்வில் ஏகப்பட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர். ஒரு சில பிரபலங்கள் பங்கேற்ற புகைப்படங்கள் தற்போது வெளியாகி உள்ளன.

நடிகர் அர்ஜுனின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையாவை காதலித்து வந்த நிலையில் இருவரும் கடந்த ஜூன் 10ம் தேதி திருமணம் செய்துக் கொண்டனர். திருமணத்தை தொடர்ந்து திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு அர்ஜுன் ஏற்பாடு செய்திருந்த நிலையில் இருவரும் இன்னமும் ஹனிமூன் செல்லவில்லை.
ஐஸ்வர்யா அர்ஜுன் திருமணம்: ஜீ தமிழில் அர்ஜுன் தொகுத்து வழங்கிய சர்வைவர் தமிழ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட உமாபதி ராமையாவுடன் ஐஸ்வர்யா அர்ஜுன் நெருங்கி பழக சந்தர்ப்பம் கிடைத்த நிலையில், இருவரிடையே அது காதலாக மலரும் வாய்ப்பை ஏற்படுத்தியது. பெரியவர்களின் சம்மதத்துடன் திருமணம் சமீபத்தில் கோயிலில் கோலாகலமாக நடைபெற்றது.

காதல் கிசுகிசு: நடிகை யாஷிகா ஆனந்துடன் தம்பி ராமையாவின் மகன் உமாபதி நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பின. இருவரும் காதலித்து வருகிறார்களா? என்கிற கேள்விகள் எழுந்தன. ஆனால், இருவரும் வெறும் நண்பர்கள் தான் என்றும் கூறப்பட்ட நிலையில், அர்ஜுன் மகளை காதலிக்கிறார் உமாபதி என கிசுகிசுக்கள் கிளம்பிய நிலையில், இருவரும் தங்கள் காதலை வெளிப்படுத்தி விட்டனர்.
திருமண வரவேற்பு: ஜூன் 10ம் தேதி திருமணம் நடைபெற்ற நிலையில், நேற்று சென்னையில் உள்ள லீலா பேலஸில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்று சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களுக்கு சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. ஏராளமான சினிமா பிரபலங்கள் நேற்று நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்றனர். நீல நிற கோட் அணிந்து மாப்பிள்ளை உமாபதி மாஸ் காட்டினார். லைட் பிங்க் நிறத்திலான டிரான்ஸ்பரன்ட் சேலையில் மணமகள் ஐஸ்வர்யா அர்ஜுன் மின்னினார்.

அரசியல் தலைவர்கள்: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல அரசியல் பிரபலங்கள் நேற்று நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மணமக்களை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்தும் புகைப்படங்கள் வெளியாகி அதிகம் பரவி வருகின்றன.
கூல் சுரேஷ் பரிசு: உமாபதி ராமையா மற்றும் ஐஸ்வர்யா அர்ஜுன் திருமணத்தின் போது எடுத்த புகைப்படத்தை பெரிதாக ஃபிரேம் போட்டு நடிகர் கூல் சுரேஷ் மேடையில் ஏறி மணமக்களிடம் கொடுத்து வாழ்த்திய காட்சிகள் வெளியாகி உள்ளன. மேலும், பல சினிமா நட்சத்திரங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்ற நிலையில், அவர்களின் புகைப்படங்கள் ஒவ்வொன்றாக வெளியாகும் என தெரிகிறது. திருமண வரவேற்பு முடிந்த நிலையில், ஐஸ்வர்யா மற்றும் உமாபதி வெளிநாட்டுக்கு தேனிலவுக்கு செல்லப் போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











