அஜித்குமார் தாயார் மறைவு.. தேற்ற வார்த்தைகள் இல்லை.. முக ஸ்டாலின் இரங்கல்!
சென்னை: நடிகரும், கார் ரேசருமான அஜித் குமார் அவர்களின் தாயார் மோகினி மணி இன்று காலை காலமானார். அவருக்கு வயது 85. இந்த செய்தி வெளியாகியதையடுத்து திரையுலகினர், ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் பலர் தங்களது இரங்கல்களை தெரிவித்து வரும் நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
அஜித் தாயார் மறைவு: கடந்த சில நாட்களாக வயது மூப்பு காரணமாக சில உடல்நலக்குறைவுகளை சந்தித்து வந்த மோகினி மணி, இன்று காலை உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மோகினி மணி, மறைந்த பி.எஸ். மணி அவர்களின் துணைவியார் ஆவார். அஜித்குமார், அனில்குமார், அனுப் குமார் ஆகியோரின் தாயாரான இவர், குடும்பத்தின் தூணாக இருந்தார். அஜித்தின் தந்தை பி.எஸ். மணி கடந்த 2023 ஆம் ஆண்டு காலமானார். தனது பெற்றோர் மீது மிக நெருக்கமான பாசப்பிணைப்பை கொண்டிருந்தார் அஜித்.

இறுதி சடங்கு எப்போ: தாயாரின் மறைவால் அஜித்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மிகுந்த துயரத்தில் உள்ளனர். அவரின் இறுதிச்சடங்கு தொடர்பான தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மோகினி மணி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர், ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் முகஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.
முக ஸ்டாலின் இரங்கல்: அதில், அன்புச் சகோதரர் அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன். உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் திரு. அஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை. அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். திரு. அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும் என பதிவிட்டுள்ளார். மோகினி மணியின் இறுதிச்சடங்கு சென்னை பாலவாக்கத்தில் உள்ள அஜித் வீட்டில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications