அதிரடியான கையெழுத்து… ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன திரைப்பிரபலங்கள் !

சென்னை : தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின், ஆட்சிக்கு வந்த முதல் நாளே அடுத்தடுத்து அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

Recommended Video

Suriya Wishing Chief Minister Stalin | Stalin பதவி பிரமாணம் #TnCMStalin

தமிழக முதல்வராகி 5 முக்கியமான திட்டங்களை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார்.

முதல்வரின் இந்த அதிரடியான கையெழுத்துக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலருக்கும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பதவி ஏற்றார்

பதவி ஏற்றார்

தமிழக முதல்வராக இன்று காலை பொறுப்பேற்றுக் கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகம் சென்று சென்னை தலைமைச் செயலகத்தில் காவல்துறை மரியாதையை ஏற்ற அவர், முதல்வர் இருக்கையில் முதன்முறையாக அமர்ந்து பணிகளைத் தொடங்கினார்.

ஆவின் பால் விலை குறைப்பு

ஆவின் பால் விலை குறைப்பு

ரேஷன் அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதி ரூ.4 ஆயிரம் - கோப்பில் கையெழுத்திட்டார். அதில், முதல் தவணையாக ரூ. 2000 வீதம் மே மாதத்திலேயே வழங்கப்படும். ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ. 3 குறைப்பு, அனைத்து மகளிரும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் நாளை முதல் இலவசமாக பயணிக்கலாம் என்ற உத்தரவில் கையெழுத்திட்டார்.

உங்கள் தொகுதியில் முதலமைச்சர்

உங்கள் தொகுதியில் முதலமைச்சர்

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைபெறும் மக்களின் கட்டணத்தை தமிழக அரசே ஏற்கும், மனுக்கள் மீது 100 நாட்களுக்குள் தீர்வுகாண 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தை செயல்படுத்த புதிய துறை உருவாக்கம் ஆகிய 5 முக்கிய கோப்புகளில் முதல்வர் மு.க ஸ்டாலின் கையெழுத்திட்டுள்ளார்.இதற்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

மிக்க நன்றி முதல்வரே

மிக்க நன்றி முதல்வரே

கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ள விஜய் வசந்த், தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த முத்தான 5 கையெழுத்துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். அதில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4000 மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள கொரோனா நோயாளிகளின் சிகிச்சை செலவை அரசே ஏற்கும் என்ற அறிவிப்புகள் பேரிடர் காலத்தில் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும். மிக்க நன்றி மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே என பதிவிட்டுள்ளார்.

வாழ்த்துக்கள்

வாழ்த்துக்கள்

இதே போல சுல்தான் பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணனும் தனது ட்விட்டர் பக்கத்தில், இன்று பதவி ஏற்றிருக்கும் தமிழக முதல்வர் திரு முகஸ்டாலின் அவர்களுக்கும், அமைச்சர் பெருமக்களுக்கும் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், தமிழகத்தின் நீர்வளத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுள்ள எங்கள் காட்பாடி தொகுதி திரு.துரைமுருகன் ஐயா அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.

More from Filmibeat

Read more about: vijay vasanth
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X