இலவசங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த மு.க. ஸ்டாலின்.. மக்கள் விரும்பும் வளர்ச்சியை முன்னெடுப்பாரா விஜய்?

சென்னை: பிங்க் பஸ், மகளிருக்கு ஊக்கத்தொகை என ஏகப்பட்ட இலவசங்களை அடுக்கிய முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தேர்தல் நேரத்திலும் மகளிருக்கு பணம் சென்று சேர வேண்டும் என்பதற்காக கோடை ஸ்பெஷல் போனஸ் என கடைசியாக 5000 ரூபாய் வரை போட்டார்.

மேலும், மீண்டும் ஆட்சிக்கு வந்தால், 8000 ரூபாய் கூப்பனில் புதிதாக ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் எல்லாம் வாங்கிக் கொள்ளலாம் என ஏகப்பட்ட இலவச அறிவிப்புகளை அடுக்கினார்.

MK Stalin s Focus on Freebies Will Vijay Deliver the Development People Want

ஆனால், மு.க. ஸ்டாலின் சறுக்கிய இடமே தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் இடையே அதிகரித்த போதைப் பழக்கம் மற்றும் பெண்களுக்கும் சிறுமிகளுக்கும் எதிராக நடந்த பாலியல் வன்முறைகளை ஸ்டாலின் அரசு தடுக்காமல் விட்டதால் தான் மக்கள் திமுகவை வீட்டுக்கு அனுப்பி விட்டனர்.

2500 ரூபாய் முதல் 1 பவுன் தங்கம் வரை: தமிழக வெற்றிக் கழகமும் ஏகப்பட்ட இலவச அறிவிப்புகளை அறிவித்துள்ளனர். மகளிருக்கு 2500 ரூபாய், திருமணம் ஆகும் பெண்களுக்கு 1 பவுன் தங்கம் மற்றும் பட்டுச்சேலை, இலவச சமையல் சிலிண்டர் வருடத்துக்கு 6, 200 யூனிட் இலவச மின்சாரம், அனைத்து அரசுப் பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவச பயணம், மாணவர்களுக்கான உதவித் தொகை, காப்பீட்டுத் தொகை என ஏகப்பட்ட இலவச திட்டங்களையும் விஜய்யும் அடுக்கியுள்ளார்.

போதைப் பொருள் இல்லா தமிழ்நாடு: இலவச திட்டங்களுக்கு விஜய் முன்னுரிமை தருவதை விட தமிழ்நாட்டு மக்கள் எந்த மாற்றத்தை விரும்பி வாக்கு செலுத்தினார்களோ அந்த மாற்றங்களுக்கு முதலில் விஜய் முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது. பள்ளி மாணவர்களுக்கு எளிதில் கிடைக்கும் போதைப் பொருள் தான் அவர்களை மிருகங்களாக மாற்றி வருகின்றன. பல பாலியல் குற்றங்களுக்கும் வழிவகை செய்கின்றன. போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு என்பதை விஜய் முதல்வராக மாறிய உடனே முன்னெடுத்து செயல்பட்டல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும்.

பெண்களுக்கு பாதுகாப்பு: போதைப் பொருள் ஒழிப்பை தொடர்ந்து டாஸ்மாக் உள்ளிட்டவற்றை குறைக்கும் நடவடிக்கையையும் விஜய் எடுக்க வேண்டும். குறிப்பாக தமிழ்நாட்டில் பெண்களுக்கும், பெண் குழந்தைகளுக்கும் பாதுகாப்பை 100 சதவீதம் உறுதி செய்ய வேண்டும். காவல்துறையை சரியாக கட்டுப்படுத்தினால் மற்றவற்றை அவர்கள் சரி செய்து விடுவார்கள் என்கின்றனர்.

அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும்: சிங்கப்பூர் போல தமிழ்நாட்டை மாற்றப் போகிறோம் என பலர் சொன்னாலும், இத்தனை ஆண்டுகள் ஆகியும் அதெல்லாம் வெறும் கனவாகவே உள்ளது. மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை எந்தவொரு ஊழலுக்கும் இடம் கொடுக்காமல் சரியாக செய்தாலே விஜய்யின் ஆட்சி தமிழ்நாட்டில் தொடரும். அப்படியென்றால் அடுத்த முறை மக்கள் இன்னொரு மாற்றத்தை நோக்கி திரும்பி விடுவார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X