கருணாநிதி வழியில் கமலுக்கு வாழ்த்துச் சொன்ன ஸ்டாலின்!
சென்னை : தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத ஆளுமை கமல்ஹாசனுக்கு இன்று 63-வது பிறந்தநாள். கமல்ஹாசனின் பிறந்தநாளையொட்டி திரையுலகப் பிரபலங்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இன்றைய பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாமென தனது ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் கமல். பிறந்த நாளைக் கொண்டாடுவதை விட, அதை மாற்றத்துக்கான நாளாக மாற்றுங்கள் என்று தன் ரசிகர்களுக்கு அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் நடிகர் கமல்ஹாசனுக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். கலைஞர் கருணாநிதி கமல்ஹாசனுக்கு வழங்கிய பட்டமான 'கலைஞானி' என்பதைக் குறிப்பிட்டு வாழ்த்துக் கூறியுள்ளார் ஸ்டாலின்.
'அன்பிற்கினிய நண்பருக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நீங்கள் உடல் ஆரோக்கியத்துடன் பல்லாண்டு வாழ விழைகிறேன்' என தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்தியுள்ளார் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின்.
"நாளை என்பது மற்றுமொரு நாளே.. வேலை கிடக்குது ஆயிரமிங்கே.. கோலையுங்குடியையும் உயரச் செய்வோம்.. வேலைவருமெனத் தவமிருக்காது.. காலையிலேயே புதுயுகம் செய்வோம்," என்று தன் ட்விட்டர் பக்கத்தில் கமல் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











