பிரபல இயக்குநர் கொடுத்தது போதை பார்ட்டி: எம்.எல்.ஏ. பரபரப்பு புகார்
Recommended Video
மும்பை: பாலிவுட் இயக்குநர் கரண் ஜோஹார் அளித்த பார்ட்டியில் பிரபலங்கள் போதைப்பொருள் பயன்படுத்தியதாக எம்.எல்.ஏ. மஜிந்தர் சிர்சா குற்றம் சாட்டியுள்ளார்.
பிரபல பாலிவுட் இயக்குநரும், தயாரிப்பாளருமான கரண் ஜோஹார் திரையுலக பிரபலங்களுக்கு பார்ட்டி கொடுத்தார். அந்த பார்ட்டியில் நடிகைகள் தீபிகா படுகோனே, மலாய்கா அரோரா, நடிகர்கள் ரன்பிர் கபூர், வருண் தவான், ஷாஹித் கபூர், விக்கி கவுஷல், அர்ஜுன் கபூர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அந்த பார்ட்டியின்போது எடுத்த வீடியோவை கரண் சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.
தீபிகா
கரண் வெளியிட்ட வீடியோவை பார்த்தவர்கள் தீபிகா, மலாய்கா, ரன்பிர் ஆகியோர் செம போதையில் இருப்பது தெளிவாகத் தெரிகிறது என்றார்கள். இந்நிலையில் சிரோமணி அகாலிதளம் கட்சி எம்.எல்.ஏ. மஜிந்தர் சிர்சாவும் அந்த வீடியோவை பார்த்துவிட்டு பிரபலங்கள் போதைப்பொருள் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டி ட்வீட் போட்டுள்ளார்.
எம்.எல்.ஏ.
எம்.எல்.ஏ. சிர்சா போட்ட ட்வீட்டை பார்த்த நெட்டிசன்கள் ஆமாம், கரண் ஜோஹார் கொடுத்த பார்ட்டியில் மது மட்டும் அல்ல போதைப் பொருளும் பயன்படுத்தியுள்ளனர் என்று கூறி புகைப்படம் வெளியிட்டுள்ளனர்.
ரன்பிர்
40களில் இருக்கும் மலாய்கா அரோரா கணவரை பிரிந்த பிறகு தன்னை விட 12 வயது சிறியவரான அர்ஜுன் கபூரை காதலிக்கிறார். மகனை வீட்டில் விட்டுவிட்டு காதலருடன் சேர்ந்து பார்ட்டியில் போதைப் பொருள் உட்கொள்கிறார். தீபிகாவோ தனது முன்னாள் காதலரான ரன்பிருடன் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளார். ரன்பிரின் காதலியான ஆலியா பட் பார்ட்டிக்கே வரவில்லை என்று நெட்டிசன்கள் வீடியோவை பார்த்து விமர்சித்துள்ளனர்.
தியோரா
சிர்சாவின் ட்வீட்டை பார்த்த காங்கிரஸ் தலைவர் மிலிந்த் தியோரா அளித்த பதிலில் கூறியிருப்பதாவது, அந்த பார்ட்டியில் என் மனைவியும் கலந்து கொண்டார்( வீடியோவிலும் உள்ளார்). யாரும் போதைப் பொருள் பயன்படுத்தவில்லை அதனால் பொய் சொல்லி உங்களுக்கு தெரியாதவர்களின் பெயரை கெடுக்க வேண்டும். நீங்கள் மன்னிப்பு கேட்பீர்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











