அதிகம் சம்பளம வாங்கும் இசையமைப்பாளர்கள்... No 1 இடத்தில் ஏஆர் ரஹ்மானுக்கே டஃப் கொடுத்த பிரபலம்..?
சென்னை: இந்தியளவில் திரை பிரபலங்கள் தற்போது கோடிகளில் சம்பளம் வாங்கி வருகின்றனர்.
முன்னணி இசையமைப்பாளர்களும் ஹீரோக்களுக்கு இணையாக கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியளவில் அதிக சம்பளம் பெறும் இசையமைப்பாளர்களில் கோலிவுட், டோலிவுட் மியூசிக் டைரக்டர்கள் தான் டாப்பில் உள்ளனர்.
இதுவரை அதிக சம்பளம் வாங்கி வந்த ஏஆர் ரஹ்மானையே முன்னணி இசையமைப்பாளர் ஒருவர் பீட் செய்துள்ளது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

டாப் 5ல் இடம்பிடித்த சந்தோஷ்
அட்டக்கத்தி படத்தில் இசையமைப்பாளராக என்ட்ரி கொடுத்தவர் சந்தோஷ் நாராயணன். பா ரஞ்சித் இயக்குநராக அறிமுகமான இதே படத்தில் தான் சந்தோஷும் அடியெடுத்து வைத்தார். குறுகிய காலங்களிலேயே தமிழில் முக்கியமான இசையமைப்பாளராக வலம் வரும் சந்தோஷ், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். ரஜினியின் கபாலி, காலா உட்பட மேலும் பல படங்களில் தனது பின்னணி இசையால் மிரட்டிய சந்தோஷ், ஒரு படத்துக்கு 2 முதல் 3 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம்.

4ம் இடத்தில் யுவன்
திரையுலகில் 26 ஆண்டுகளை கடந்துவிட்ட யுவன் சங்கர் ராஜா, ஆரம்பத்தில் தரமான ஹிட் பாடல்களை கொடுத்தார். கடந்த சில வருடங்களாக ஃபார்மில் இல்லாமல் தவித்து வந்த யுவன், கடந்தாண்டு வெளியான லவ் டுடே, நானே வருவேன் படங்கள் மூலம் கம்பேக் கொடுத்துள்ளார். யுவன் இசைக்காக பெரும் இளைஞர்கள் கூட்டமே காத்திருக்கிறது. 90ஸ் கிட்ஸ், 2கே கிட்ஸ் என இருதரப்பையும் வசப்படுத்தியுள்ள யுவன், ஒரு படத்துக்கு 3 முதல் 4 கோடி வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது.

3வது இடத்தில் அனிருத் - தமன்
அதிக சம்பளம் வாங்கும் இசையமைப்பாளர்களின் பட்டியலில் அனிருத்தும் தமனும் சமமாக உள்ளனர். தனுஷின் 3 படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான அனிருத், தற்போது ரஜினியின் ஜெயிலர், தலைவர் 170, கமலின் இந்தியன் 2, விஜய்யின் லியோ உட்பட கோலிவுட் டாப் ஹீரோக்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவர் ஒரு படத்துக்கு 5 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். ஏஆர் ரஹ்மானுக்கு அடுத்து பல இயக்குநர்கள், தயாரிப்பாளர்களின் அடுத்த சாய்ஸ் இப்போது அனிருத் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கே அனிருத் என்றால், தெலுங்கில் தமனும் ஒரு படத்துக்கு 5 கோடி வரை சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது.

நம்பர் 1 இடத்துக்கு வந்த சோதனை
மணிரத்னத்தின் ரோஜா மூலம் அறிமுகமான ஏஆர் ரஹ்மான், பாலிவுட்டில் ரங்கீலா படம் மூலம் இந்திய இசையின் அடையாளம் ஆனார். அன்று முதல் பல வருடங்களாக நம்பர் 1 இடத்தில் இருப்பது ஏஆர் ரஹ்மான். ஹாலிவுட் வரை சென்று ஆஸ்கர் விருதுகளை தட்டித்தூக்கி வந்த ரஹ்மான் தான் இன்றும் பல இயக்குநர்களின் ஃபர்ஸ்ட் சாய்ஸ். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி, ஹாலிவுட் என ரவுண்டு கட்டி வரும் ஏஆர் ரஹ்மான், ஒரு படத்துக்காக 10 கோடி வரை சம்பளம் வாங்குகிறார். சம்பளத்தில் இரண்டாம் இடம் என்றாலும், இன்னும் இந்தியளவில் இவர் தான் நம்பர் 1 என சொல்லப்படுகிறது.

MM கீரவாணி நம்பர் 1
1991ம் ஆண்டு முதல் இசையுலகில் பயணித்து வரும் MM கீரவாணி, தமிழ், தெலுங்கு படங்களுக்கு இசையமைத்து வருகிறார். ராஜமெளலியின் பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் படங்கள் வெளியான பின்னர் உலகளவில் பிரபலமாகிவிட்டார். ஆனால், அவரது ஆரம்ப காலத்திலேயே தமிழில் அழகன் உட்பட தெலுங்கிலும் பல ஹிட் படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது ஆர்.ஆர்.ஆர் படத்துக்காக கோல்டன் குளோப் விருதை வென்ற MM கீரவாணி, ஒரு படத்துக்காக 16 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். இவரது நாட்டு நாட்டு பாடல் தற்போது ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











