‘சந்திரமுகி 2’ என்னை மரண பயத்தில் ஆழ்த்தியது.. முதல் விமர்சனம் கொடுத்த பிரபலம்!
சென்னை: ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள 'சந்திரமுகி 2' படத்தின் முதல் விமர்சனத்தை இசையமைப்பாளர் கீரவாணி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
மணிசித்திரதாழ் படத்தின் ரீமேக்கான சந்திரமுகி திரைப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருந்தார்.
இப்படம் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததால், திரையரங்கில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

சந்திரமுகி 2: சந்திரமுகி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு பின் சந்திரமுகி 2 படம் உருவாகி உள்ளது.இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ஹீரோ கதாபாத்திரத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். படப்பிடிப்பிற்கு முன்பாக சூப்பர் ஸ்டார் அவர்களை நேரில் சந்தித்து ஆசி பெற்றார் லாரன்ஸ். ஜோதிகா நடித்த ரோலில் பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடித்து உள்ளார். வடிவேலு, ராதிகா சரத்குமார், ரவிமரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
செப்டம்பர் 14ந் தேதி ரிலீஸ்: லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தயாரிப்பில் உருவாகி உள்ள சந்திரமுகி 2 படத்தின் படப்பிடிப்பு முழுவீச்சில் நடைபெற்று முடிந்துள்ளது. சந்திரமுகி 2 படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை படக்குழு அவ்வப்போது வெளியிட்டு வந்த நிலையில், மூக்கில் கடுக்கன் அணிந்து வித்தியாசமான கெட்டப்பில் ராகவா லாரன்ஸ் இருந்த புகைப்படத்தை பார்த்ததும் படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்தது. இப்படத்தை விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு செப்டம்பர் 14ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

முதல் விமர்சனம்: இந்நிலையில் 'சந்திரமுகி 2 படத்திற்கு இசையமைத்துள்ள இமையமைப்பாளர் கீரவாணி தனது ட்விட்டர் பக்கத்தில், படம் குறித்து முதல் விமர்சனத்தை பதிவிட்டுள்ளார். அதில், சந்திரமுகி 2 வரும் கதாபாத்திரங்கள் மரண பயத்தில் தூக்கமில்லாத இரவுகளை கழிக்கின்றனர். என் முயற்சியால் மனதைக் கவரும் காட்சிகளுக்கு 2 மாதங்கள் தூக்கமில்லாமல் இரவு பகல் பாராமல் படத்தின் பிரம்மிக்க வைக்கும் காட்சிகளுக்கு உயிர் கொடுத்துள்ளேன் என பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











