பிக்பாஸ் வீடு மாதிரி ஆயிடுச்சு... அடுத்து யாரு? மக்கள் நீதி மய்யத்தை பங்கம் பண்ணும் பிரபல நடிகை!
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் தொடர்ந்து விலகுவதை வைத்து அக்கட்சியை பிரபல நடிகை மரண பங்கம் செய்துள்ளார்.
Recommended Video
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தோல்வியை சந்தித்தது. அக்கட்சி சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தோல்வியை சந்தித்தனர்.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகர் கமல்ஹாசனும் தோல்வியடைந்தார்.

கட்சியில் இருந்து ஓட்டம்
இதனை தொடர்ந்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். கட்சியின் துணை தலைவர் மகேந்திரன், பொன்ராஜ், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, பத்மபிரியா என பலரும் கட்சியில் இருந்து ஓட்டம் பிடித்து வருகின்றனர்.

சினிமாவை தொடரலாம்
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நிர்வாகிகள் விலகுவதை பார்த்த பிரபலங்கள் பலரும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பிரபல இயக்குநரான மோகன் ஜி, கமலுக்கு சினிமாதான் சரி, அவர் அதையே தொடரலாம் என்று கூறினார்.

விசுவாசம் எங்கே?
அதனை தொடர்ந்து கட்சியில் இருந்து விலகியவர்களை பிக்பாஸ் பிரபலமான நடிகை சனம் ஷெட்டி விளாசி தள்ளினார். உங்களின் விசுவாசம் எங்கே? நம்பிக்கை துரோகம் இழைத்து விட்டீர்கள் என்று விளாசியிருந்தார்.

கஸ்தூரி பங்கம்
இந்நிலையில் நடிகை கஸ்தூரியும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நிர்வாகிகள் விலகியதை வைத்து பங்கம் செய்துள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில் மதுரவாயில் தொகுதியில் போட்டியிட்ட யூட்யூபர் பத்மபிரியா மற்றும் வேளச்சேரியில் இருந்து ஓடிய சந்தோஷ் பாபு ஆகியோர் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகியுள்ளனர்.

பிக்பாஸ் வீடு போல்
அவர்கள் இருவரும் தேர்தலுக்கு முன்பாகதான் கட்சியில் சேர்ந்தனர். அது பிக்பாஸ் வீடு போன்று ஆகிவிட்டது. அடுத்து யார் போக போகிறார்கள்? என்று கேட்டு #elimination #maiam #kamal ஆகிய ஹேஷ்டேக்குகளை குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











