Don't Miss!
- Sports
எங்கள் இனிய நாளை கெடுத்து விடாதீர்கள்.. மன வேதனையாக இருக்கு.. திருமணமான முதல் நாளே ஆப்ரிடி டிவிட்
- News
டெல்லி விமான நிலையத்தில் கேன்சர் பாதித்த பெண் பயணியை இறக்கிவிட்ட அமெரிக்க விமானம்.. காரணம் என்ன?
- Lifestyle
சுக்கிர பெயர்ச்சியால் பிப்ரவரி 15 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு லாபகரமான காலமாக இருக்கப் போகுது...
- Automobiles
இது செம காராச்சே! இதோட விலையை திடீர்ன்னு இவ்வளவு கூட்டிட்டாங்க! காரணம் இது தான்!
- Finance
7வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்..! விரைவில் குட் நியூஸ்
- Technology
பார்வை இழந்தவர்களுக்கான புது சூப்பர் Smartwatch.! இந்தியாவில் உருவான அசத்தல் கண்டுபிடிப்பு.!
- Travel
இனி திருப்பதியில் உண்டியல் பணம் கணக்கிடும் போது கண்ணாடி சுவர்கள் வழியே நீங்களும் பார்க்கலாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
ஆபாசமாகப் பேசினார்.. ஆடைகளை நீக்கச் சொன்னார்.. பிரபல இயக்குனர் மீது பரபரப்பு பாலியல் புகார்!
மும்பை: பிரபல நடிகர் மற்றும் இயக்குநர் மீது மாடல் ஒருவர் பரபரப்பு பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.
இந்தியில் தர்னா ஸரூரி ஹே, ஹேய் பேபி, ஹவுஸ்புல், ஹவுஸ்புல் 2 உள்பட சில படங்களை இயக்கியவர் சாஜித் கான்.
பல படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்தும் உள்ளார். இவர் மீது சில நடிகைகள் ஏற்கனவே மீடு புகார் கூறி இருந்தனர்.

ஜாக்குலின் பெர்னாண்டஸ்
இந்தி நடிகைகள், சலோனி சோப்ரா, ராச்சல் ஒயிட், சிம்ரன் சுரி, ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்பட சிலர் கூறியிருந்தனர். இது அப்போது பரபரப்பானது. இந்நிலையில் இப்போது பிரபல மாடலான டிம்பிள் பால், அவர் மீது பாலியல் புகார் கூறியுள்ளார். இது சமூக வலைதளத்தில் வைரலானது. இதையடுத்து #ArrestSajidKhan என்ற ஹேஷ்டேக் நேற்றிரவு ட்ரெண்டானது.

பேசிவிட வேண்டும்
மாடல் டிம்பிள் பால் தனது இன்ஸ்டாவில் இது குறித்து பதிவிட்டுள்ளார். 'ஜனநாயகம் இறந்துவிடுவதற்கு முன்னும் பேச்சு சுதந்திரம் இல்லாத நிலை வருவதற்குள்ளும் இதை பேசிவிட வேண்டும் என்று நினைத்தேன் என குறிப்பிட்டு அவர் கூறியிருப்பதாவது: மீடூ இயக்கம் தொடங்கிய நேரத்தில் சாஜித் கான் பற்றி பலர் பேசினார்கள்.

தவறாக நடந்தார்
எனக்கு அப்போது தைரியம் வரவில்லை. என் குடும்பத்துக்காக சம்பாதிக்க வேண்டியிருந்தது. அதனால் அமைதியாக இருந்தேன். இப்போது பெற்றோர் என்னுடன் இல்லை. எனக்காக நான் சம்பாதிக்கிறேன். அதனால் எனது 17 வயதில் சாஜித் கான் என்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்பதை தைரியமாகச் சொல்ல முடியும்.

ஆடைகளை நீக்குமாறு
அவருடைய ஹவுஸ்புல் படத்துக்கான நடிகர் தேர்வின் போது, அவர் என்னிடம் ஆபாசமாக பேசினார். தொட முயன்றார். அவர் முன் என் ஆடைகளை நீக்கச் சொன்னார். அவர் எத்தனை பெண்களை இப்படி நடத்தியிருப்பார் என்பது கடவுளுக்கே தெரியும். சிறு வயதில் அது என்னை எப்படிப் பாதித்திருக்கிறது என்பதை உணர்ந்ததால் இப்போது நான் சொல்கிறேன்.

நான் செய்த தவறு
இது போன்ற ஆட்கள் சிறைக் கம்பிகளுக்குப் பின் இருக்க வேண்டும். பட வாய்ப்புக்காக இப்படி செய்வதால் மட்டுமல்ல, நம் கனவுகளை திருடி விடுவதாலும்தான். ஆனால் நான் நிறுத்தவில்லை. இதுபற்றி பேசாமல் இருந்ததுதான் நான் செய்த தவறு' என்று டிம்பிள் குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video

கைது செய்ய வேண்டும்
மாடல் டிம்பிள் பாலின் இந்தப் பதிவை அடுத்து, நெட்டிசன்ஸ் அவரை விளாசி வருகின்றனர். சாஜித் கானை கைது செய்ய வேண்டும் என்றும் அவரை ஏன் இன்னும் கைது செய்யவில்லை என்றும் அவர்கள் ட்விட்டரில் விவாதித்து வருகின்றனர். இதையடுத்து #ArrestSajidKhan என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டானது. இது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.