பிக் பாஸ் வீட்டுக்கு வரப் போகும் பிரபல மாடல் அழகி.. யாரு இந்த சம்யுக்தா? எகிறும் எதிர்பார்ப்பு!

சென்னை: மிஸ் சென்னை பட்டம் வென்ற பிரபல மாடல் அழகியும் டிவி சீரியல் நடிகையுமான சம்யுக்தா விரைவில் தொடங்கவுள்ள பிக் பாஸ் தமிழ் சீசன் 4ல் போட்டியாளராக கலந்து கொள்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Recommended Video

Bigg Boss 4 Tamil காக 4 போட்டியாளர்களை மட்டும் தனிமைப்படுத்துஉள்ளனர்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் மாடலிங்கில் கலக்கும் பெண்கள் மற்றும் ஆண்கள் முதல் சீசனில் இருந்தே போட்டியாளர்களாக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

சம்யுக்தாவின் வரவு இந்த சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை செம ஸ்டைலிஷ் ஆக கொண்டு செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நாங்க வரலை

நாங்க வரலை

இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட சில முக்கிய நபர்கள், நாங்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு பலத்த ஏமாற்றத்தை கொடுத்துள்ளது. நடிகை லக்‌ஷ்மி மேனன், அம்ரிதா அய்யர், அபி ஹாசன், கருண் ராமன், ஷாலு ஷம்மு உள்ளிட்டோர் பிக் பாஸ் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர்.

கன்ஃபார்ம் லிஸ்ட்

கன்ஃபார்ம் லிஸ்ட்

விஜய் டிவி பிக் பாஸ் போட்டியாளர்கள் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், வெளியான உறுதியான தகவலின் படி நடிகர் ரியோ ராஜ், ஷிவானி, கிரண், விஜே அர்ச்சனா, ரேகா, சூப்பர் சிங்கர் அஜித், கேப்ரில்லா, அனு மோகன், ரம்யா பாண்டியன் உள்ளிட்டோர் கன்ஃபார்ம் செய்யப்பட்டு, ஹோட்டல் ஒன்றில் ஹோம் குவாரண்டைன் செய்யப்பட்டுள்ளனர்.

மாடல் அழகி

மாடல் அழகி

பிக் பாஸ் முதல் சீசனில் நடிகை ரைசா வில்சன், மாடல் அழகி மற்றும் நடிகையுமான யாஷிகா ஆனந்த், சாக்‌ஷி அகர்வால் வரிசையில் இந்த ஆண்டு மாடல் அழகியும் சீரியல் நடிகையுமான சம்யுக்தா என்பவர் கலந்து கொள்ள உள்ளதாக லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது.

மிஸ் சென்னை

மிஸ் சென்னை

சம்யுக்தா என்றவுடன் கோமாளி படத்தில் நடித்த, சமீபத்தில் உள்ளாடை சர்ச்சையில் தாக்கப்பட்ட சம்யுக்தா ஹெக்டே என நினைத்து விட வேண்டாம். இவர் சென்னையை சேர்ந்தவர். மிஸ் சென்னை பட்டத்தையும் வென்றுள்ளார். இவரது முழுப் பெயர் சம்யுக்தா கார்த்திக். இந்த சீசனில் இவர் கலந்து கொள்ளப் போகிறார் என்கிற ஹாட் அப்டேட் தற்போது கசிந்து இருக்கிறது.

சந்திரகுமாரி

சந்திரகுமாரி

நடிகை ராதிகா சரத்குமார் நடிப்பில் சன் டிவியில் வெளியான சந்திரகுமாரி சீரியலில் நடித்துள்ளார் சம்யுக்தா. கடந்த ஆண்டு மலையாளத்தில் இயக்குநர் ஷாஜி என். கருண் இயக்கத்தில் வெளியான OOLU எனும் ஃபேண்டஸி படத்திலும் இவர் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஷில்பா மஞ்சுநாத், லக்‌ஷ்மி மேனன், அம்ரிதா அய்யர் உள்ளிட்ட நடிகைகள் பங்கேற்காத குறையையும் இவர் தீர்த்து வைப்பார் என தெரிகிறது.

இளமை அட்டகாசம்

இளமை அட்டகாசம்

ரம்யா பாண்டியன், ஷிவானி, கேப்ரில்லா, சம்யுக்தா என ஒரே இளமை அட்டகாசமாக இந்த சீசன் இருக்கப் போகிறது. வயசானாலும் இன்னும் முரட்டு சிங்கிளாக இருக்கும் நடிகை கிரணும் இந்த பட்டியலில் நிச்சயம் இடம் பெறுவார் என்றே தெரிகிறது. அக்டோபர் 4 எப்போ பாஸ் வரும் என வேகமாக காலண்டரை கிழிக்கும் பிக் பாஸ் வெறியர்களுக்கு இந்த சீசன் நிச்சயம் செம டைம் பாஸாக அமையும் என்பது உறுதி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X