திருமணமான 5 மாதத்தில் நடிகை த•கொலை.. மன உளைச்சல், கருக்கலைப்பு.. கணவர் தலைமறைவு!
டெல்லி: முன்னாள் மிஸ் புனே பட்டம் வென்ற 33 வயதான ட்விஷா சர்மா மரணம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த மே 12ஆம் தேதி, போபாலின் கதாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள தனது கணவர் வீட்டில் ட்விஷா சர்மா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இவருக்கு கடந்த ஆண்டு டிசம்பரில்தான் வழக்கறிஞர் சமர்த் சிங்குடன் திருமணம் நடந்துள்ளது. திருமண வாழ்க்கையில் தொடர்ந்து பிரச்சனை இருந்ததாக கூறப்படுகிறது.
மாடல் அழகியும் தெலுங்கு நடிகையான ட்விஷா சர்மா தனது கணவர் சமர்த் சிங் மற்றும் ஓய்வு பெற்ற நீதிபதியான மாமியார் கிரிபாலா சிங்குடன் வசித்து வந்தார். மே 12ந் தேதி இரவு ட்விஷா வீட்டின் மேல் மாடியில் தூக்கில் தொங்கி உள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடலை மீண்டு
AIIMS மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது, உடலை பறிசோதனை செய்த மருத்துவர், அவர் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். ட்விஷா சர்மா மரணம் குறித்து தகவல் அறிந்து வந்த குடும்பத்தினர், ட்விஷாவின் மரணத்திற்கு காரணம் அவரது கணவர் மற்றும் மாமியார் தான் என்றும் திருமண வாழ்க்கையில் தொடர்ந்து கொடுமை செய்யப்பட்டதால் தான் ட்விஷா இந்த முடிவை எடுத்ததாக குற்றம்சாட்டி வழக்குப்பதிவு செய்தனர்.

நடிகை தற்கொலை: தற்போது ட்விஷா தற்கொலை செய்து கொல்வதற்கு முன் அவர் மாடிக்கு செல்லும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அதில், ட்விஷா மாடிக்கு செல்லும் காட்சி இடம்பெற்றுள்ளது. அதன் பின் சில மணி நேரம் கழித்து, அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் அவரை கீழே தூக்கி கொண்டு வரும் காட்சிகளும் வெளியாகியுள்ளது. மாடியில் என்ன நடந்தது? வீட்டில் யாரெல்லாம் இருந்தார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் ட்விஷாவின் மரணத்திற்கு காரணம் கருக்கலைப்பு சம்பவம் தான் என்றும், கருவை கலைக்க ட்விஷா விரும்பியதாகவும், இதற்கு குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தாகவும் கூறப்படுகிறது. இதனால் ட்விஷா கருக்கலைப்புக்கு பிறகு மனஅழுத்தத்தில் இருந்ததாகவும், மனநல மருத்துவரை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. இதோடு மட்டுமில்லாமல் ட்விஷாவுக்கு கஞ்சா பயன்படுத்தும் பழக்கம் இருந்ததாக அவரது மாமியார் குற்றஞ்சாட்டுகிறார்.

கணவர் தலைமறைவு: ஆனால், இந்த குற்றச்சாட்டை மறுத்த ட்விஷாவின் பெற்றோர், வரதட்சணை கொடுமை, மன உளைச்சல் தான் தற்கொலைக்கு காரணம் என்றும், ட்விஷாவின் உடலில் தாக்குதலால் ஏற்பட்ட காயங்களும், பிறப்புறுப்பு சார்ந்த காயங்களும் இருந்தது. அதற்குப் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெளிவான பதில்கள் இல்லை என குற்றம்சாட்டி இருந்தனர். இதையடுத்து, மே 14ஆம் தேதி போலீசார் சமர்த் சிங் மற்றும் கிரிபாலா சிங் மீது வரதட்சணை கொடுமை மற்றும் மரணம் தொடர்பான வழக்குப் பதிவு செய்தனர். பின்னர், கிரிபாலா சிங்கிற்கு முன்ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில், சமர்த் சிங்கின் முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தற்போது சமர்த் சிங் தலைமறைவாக உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவரை கண்டுபிடிக்க உதவுபவர்களுக்கு ரூ.30 ஆயிரம் பரிசும் அறிவிக்கப்பட்டுள்ளது. இரு குடும்பங்களும் ஒருவர்மீது ஒருவர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருவதால் இந்த செய்தி தற்போது பெரும் புயலை கிளப்பி உள்ளது.


Click it and Unblock the Notifications