பிக்பாஸில் தர்ஷன் இடத்தை நிரப்ப போவது இந்த மிஸ்டர் இந்தியாதானாம்.. நிச்சயம் ஒரு லவ் ஸ்டோரி கேரண்டி!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் மேலும் ஒரு போட்டியாளர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சி வரும் அக்டோபர் முதல் வாரத்தில் தொடங்கவுள்ளது. பிக்பாஸ் புரமோ வெளியாகும் வரை இல்லாத எதிர்பார்ப்பு புரமோ வெளியான பிறகு எகிறி விட்டது.
எப்போது பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் என காத்திருக்கும் ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் குறித்து அறியவும் ஆர்வமாக உள்ளனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி
ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகும் என பிரபலங்கள் என, ரியோ ராஜ், ஆர் ஜே வினோத், கருன் ராமன், சனம் ஷெட்டி, விஜே ரக்ஷன், அம்ரிதா அய்யர், ஷிவானி, விஜய் டிவி புகழ், ஷாலு ஷம்மு, சூர்யா தேவி உள்ளிட்டோரின் பெயர்கள் அடிபட்டு வருகின்றன.

பல பட்டங்கள்
இந்நிலையில் புதிதாக ஒரு பிரபலத்தின் பெயர் அடிபட்டு வருகிறது. அதாவது மிஸ்டர் இந்தியா உள்ளிட்ட பல பட்டங்களை கைப்பற்றியுள்ள மாடல் பாலாஜி முருகதாஸின் பெயர்தான்.

வில்லன் ரோல்
ஆர்கே சுரேஷ் நடித்த 'டைசன்' என்ற படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் பாலாஜி முருகதாஸ். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள உள்ளார் என்று நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது.

கபடி பிளேயர்
சென்னையை சேர்ந்த பாலாஜி படித்து முடித்ததெல்லாம் சென்னையில்தான். கல்லூரி நாட்களில் அவர் மாவட்ட அளவிலான கபடி பிளேயராகவும் வலம் வந்தார். மிஸ்டர் இன்டர்நேஷனல் இந்தியா உள்ளிட்ட பல போட்டிகளில் பங்கேற்ற பல பட்டங்களை கைப்பற்றியுள்ளார் பாலாஜி முருகதாஸ்.

நிச்சயம் ஒரு லவ் ஸ்டோரி
ஹேண்ட்சம் மாடலான பாலாஜி முருகதாஸ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தேர்வாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சீசனில் இலங்கை மாடலான தர்ஷன் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இம்முறை பாலாஜி முருகதாஸ் பங்கேற்க உள்ளதை அறிந்த ரசிகர்கள், அப்போது நிச்சயம் இம்முறை பிக்பாஸ் வீட்டில் ஒரு லவ் ஸ்டோரி கேரண்டியாக இருக்கும் என்று கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











