ஆக்டிவாவில் சென்ற நடிகையின் ஸ்கர்ட்டை பிடித்து இழுத்து அசிங்கமாக பேசிய 2 பேர்
Recommended Video

இந்தூர்: நடிகை ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்றபோது மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் இரண்டு பேர் அவரின் ஸ்கர்ட்டை பிடித்து இழுத்துள்ளனர்.
செய்தித்தாள்களை திறந்தால், டிவியை ஆன் செய்தால் பாலியல் தொல்லை, பாலியல் பலாத்கார செய்திகளாகவே உள்ளது. சட்டம் ஒரு பக்கம் இருந்தாலும் இது போன்ற அவலங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.
இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்த நடிகையும், மாடலுமான பெண் ஒருவர் பாலியல் தொல்லைக்கு ஆளாகியுள்ளார்.

ஆக்டிவா
அந்த நடிகை சாலையில் ஹோண்டா ஆக்டிவாவில் சென்றுள்ளார். மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் அவர் சென்றபோது பைக்கில் வந்த 2 பேர் அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

தொல்லை
உள்ளே என்ன இருக்கிறது என்று காட்டு என கூறி அந்த 2 பேரும் என் ஸ்கர்ட்டை பிடித்து இழுத்தனர். நான் அவர்களை தடுக்க முயன்றபோது கட்டுப்பாட்டை இழந்து ஆக்டிவாவில் இருந்து கீழே விழுந்துவிட்டேன் என்கிறார் அந்த நடிகை.

தப்பியோட்டம்
நடுத்தெருவில் இது நடந்தும் அந்த நடிகைக்கு யாருமே உதவ முன்வரவில்லையாம். இதற்கிடையே அந்த வாலிபர்கள் பைக்கில் தப்பியோடிவிட்டனர். அந்த நடிகை கேட்டுக் கொண்டதன்பேரில் அவரின் பெயரை வெளியிடவில்லை.

பழி
நீ ஸ்கர்ட் அணிந்து வந்ததால் தான் அந்த பசங்க உன்னிடம் வாலாட்டியுள்ளனர் என்று அங்கிருந்த முதியவர் ஒருவர் என்னிடம் கூறினார். அதை கேட்டு எனக்கு மிகவும் வருத்தமாகிவிட்டது என்று அந்த நடிகை தெரிவித்துள்ளார்.

போலீஸ்
அந்த நடிகை தனது காலை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டார். காயம்பட்ட கால் புகைப்படத்தை பார்த்த மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து பதில் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











