மகளுக்கு தாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி: வைரல் வீடியோ

By Siva

Recommended Video

தாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகி- வீடியோ

மயாமி: அமெரிக்காவில் தனது 5 மாத குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்த மாடல் அழகியை பலரும் பாராட்டியுள்ளனர்.

அமெரிக்காவின் மிஷிகன் மாநிலத்தில் உள்ள மான்ரோ நகரை சேர்ந்தவர் மாரா மார்ட்டின். மாடல் அழகியான அவருக்கு அரியா என்ற 5 மாத பெண் குழந்தை உள்ளது.

மயாமி நகரில் நடந்த ஸ்விம்சூட்(நீச்சல் உடை) ஃபேஷன்ஷோவில் மாரா கலந்து கொண்டார்.

மகள்

மகள்

மாரா தனது மகளுக்கு தாய்ப்பால் கொடுத்தபடியே ராம்ப்வாக் செய்தார். மயாமி ஸ்விம் வீக் நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நடந்த இந்த ஷோவில் மாரா தங்க நிற பிகினி அணிந்திருந்தார்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

மாரா தனது மகளுக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டே ராம்ப்வாக் செய்ததை பார்த்த பார்வையாளர்கள் கை தட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்கும் வகையில் மாராவின் செயல் இருந்ததாக பலரும் பாராட்டியுள்ளனர்.

வைரல்

மாரா மார்டிட்ன் மகளுக்கு தாய்ப்பால் கொடுத்த வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது. வேலை செய்யும்போது தாய்ப்பால் கொடுத்த மாராவை பலரும் சமூக வலைதளங்களில் வாழ்த்தியுள்ளனர்.

மகள்

மகள்

நான் என் மகளுக்கு தாய்ப்பால் கொடுத்தது தலைப்புச் செய்தியாகியுள்ளதை என்னால் நம்ப முடியவில்லை. நான் தினமும் செய்யும் வேலைக்காக என்னை பாராட்டியதை வரவேற்கிறேன் என்று மாரா தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X