உதாசீனப்படுத்திய கோலிவுட்.. பாலிவுட் போன மீரா மிதுன்.. டெஸ்ட் ஷுட் கூட முடிஞ்சுடுச்சு!
Recommended Video
சென்னை: கோலிவுட் படங்களில் இருந்து அடுத்தடுத்து நீக்கப்பட்ட மீரா மிதுன் தற்போது பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரபலங்கள் பலரும் பட வாய்ப்புகள் என அசத்திக் கொண்டிருக்கின்றனர். ஆனால் நடிகை மீரா மிதுனுக்கு மட்டும் பிக்பாஸ் நிகழ்ச்சி ராசியில்லாத ஒன்றாகிவிட்டது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு மீரா மிதுனுக்கு எல்லாமே நெகட்டிவாக நடைபெறுகிறது. முதலில் நம்ம வீட்டுப் பிள்ளை படத்தில் இருந்து அவர் நடித்த காட்சிகள் அனைத்தும் நீக்கப்பட்டது.

தமிழ்நாட்டுக்கு டாடா
இதனை தொடர்ந்து அக்னிச்சிறகுகள் படத்தில் இருந்தும் நீக்கப்பட்டார் மீரா மிதுன். இதனால் கோபமடைந்த அவர், கோலிவுட்டை விளாசியதோடு தமிழகத்தில் தமிழனுக்கு வாழ வழியில்லை என்று தமிழ்நாட்டுக்கு டா டா சொல்லி டிவிட்டியிருந்தார்.

மும்பையில் டெஸ்ட் ஷுட்
இந்நிலையில் பாலிவுட் படத்தில் நடிக்க மும்பை சென்றுள்ளார் மீரா மிதுன். மும்பையில் அவர் டெஸ்ட் ஷுட் முடித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை பீச்சில் மீரா
இதுதொடர்பாக ஏற்பாடு செய்த மீரா மிதுனின் நண்பர் வங்கக்கடல் சுனாமி திறமைக்கு நோ சொன்ன நிலையில் அரபிக்கடல் திறமையை வரவேற்றுள்ளது. மீரா மிதுன் என்ற திறமை சரியான கரையை தாக்கும் என பதிவிட்டு மும்பை பீச்சில் இருந்து மீரா மிதுன் பேசும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
பாலிவுட்டுக்கு நன்றி
அதற்கு நன்றி பாலிவுட் என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஈமோஜிகளை பதிவிட்டிருக்கிறார் மீரா மிதுன்.
டெஸ்ட் ஷுட் வெற்றி
மேலும் வெற்றிகரமான டெஸ்ட் ஷூட்டிற்குப் பிறகு பேக்கிங் என பதிவிட்டுள்ள மீரா மிதுனின் நண்பர், மீரா மிதுன் பிரிஃப்கேஸ் உடன் இருக்கும் போட்டோவையும் ஷேர் செய்திருக்கிறார்.
புதிய தொடக்கம்
இதனை தொடர்ந்து இது ஒரு புது தொடக்கம் என்றும் பதிவிட்டிருக்கிறார் மீரா மிதுன்.
வீடியோக்கள்
மேலும் மும்பையில் உள்ள விநாயகர் கோவில் மற்றும் சாய்பாபா கோவிலுக்கும் சென்றுள்ளார் மீரா மிதுன். அந்த வீடியோக்களையும் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டியிருக்கிறார் மீரா.


Click it and Unblock the Notifications











