நான் சூப்பர் மாடல்னு சொல்லிக்க மாட்டேன்.. பிக்பாஸ் வீட்டிலிருந்தே மீரா மிதுனை சீண்டிய சம்யுக்தா!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மாடல் சம்யுக்தா மீரா மிதுனை விளாசியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்கள் தங்களின் கடந்த கால அனுபவங்களை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி போட்டியாளர்கள் ஒவ்வொருவராய் தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

நான் ஒரு மாடல்
அந்த வகையில் மாடல் மற்றும் ஃபேஷன் டிசைனரான சம்யுக்தா தனது கடந்த கால அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். பேச தொடங்கும் முன்பே தான் ஒரு மாடல் ஏராளமான விளம்பர படங்களில் நடித்துள்ளேன்.

மீரா மிதுனை சீண்டி
ஆனால் ஒரு போதும் என்னை நான் சூப்பர் மாடல் என சொல்லிக் கொள்ள மாட்டேன் என்றார். இதனைக் கேட்ட ஹவுஸ்மேட்ஸ்கள் குபீரென சிரித்து விட்டனர். மீரா மிதுன் தன்னைத்தானே சூப்பர் மாடல் எனக் கூறி கொள்ளும் நிலையில் அவரை ஒரே வாராக வாரினார் சம்யுக்தா.

அப்பாவுக்கு தெரியாது
தொடர்ந்து பேசிய சம்யுக்தா, என் அப்பாவுக்கு என் மீதும் என் அண்ணன் மீதும் அவ்ளோ அன்பு. ஆனால் ரொம்ப ஸ்ட்ரிக்ட். மாடலிங்கில் பங்கேற்ற போதெல்லாம் கூட அவரிடம் பொய் சொல்லிவிட்டுதான் சென்றிருக்கிறேன். 2007 மிஸ் சென்னை போட்டியில் பங்கேற்ற போதுகூட பொய் சொல்லிவிட்டுதான் சென்றேன்.

கேரட் சாப்பிடும் போது
திருமணமானது.. மகன் பிறந்தான்.. கணவர் எப்போதும் வேலை வேலை என்றிருப்பார். நான் எப்போதும் என் மகனுடன் தான் இருப்பேன். அவனுடன் இருப்பது விளையாடுவது எனக்கு ரொம்ப பிடிக்கும். ஒருமுறை அவன் கேரட் சாப்பிடும் போது அதை முழுங்கி விட்டான்.

அப்படி தெரியவில்லை
அப்புறம் டாக்டரிடம் சென்றோம் நார்மலாகத்தான் இருக்கிறான் என்றார்கள். ஆனால் நான் பால் கொடுக்கும் போது அவனுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். அதை எல்லோரிடமும் சொன்னேன், நீ அவனையே பார்ர்த்துக்கொண்டிருப்பதால் அப்படி தெரிகிறது. அவன் நார்மலாகத்தான் இருக்கிறான் என்றார்கள்.

மூச்சுக்குழாயில் சிக்கி
ஆனால் என் உள்ளுணர்வு அதை ஏற்கவேயில்லை. மீண்டும் மருத்துவரிடம் சென்றோம், கேரட் மூச்சுக்குழாயில் சிக்கியிருப்பதை கண்டுபிடித்தார்கள். அதன் காரணமாக அவனின் நுரையீரல் ஒரு பக்கம் வீங்கியிருந்தது. கொஞ்சம் தாமதமாக வந்திருந்தாலும் அவ்ளோதான் என்றார்கள்.
Recommended Video

அம்மாவுக்கு தெரியும்
பின்னர் உடனடியாக ஆபரேஷன் செய்து அதனை எடுத்தார்கள். அந்த 6 நாட்களும் உயிர் போயிவிட்டது. ஒரு அம்மாவுக்குதான் குழந்தையின் அசைவுகள் தெரியும். பெண்களுக்கு சவால்கள் அதிகம். சேலை கட்டியிருந்தாலும், ஜீன்ஸ் போட்டாலும் பெண் பெண்தான் என்றார்.


Click it and Unblock the Notifications











