பிக் பாஸ் வீட்டில் என்னுடைய க்ரஷ் இவர் தான்..முதன்முறையாக மனம் திறந்த ஷெரினா!

சென்னை : பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய ஷெரினா, எனக்கு இவர் மேலத்தான் க்ரஷ் என்று மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.

கேரளாவைச் சேர்ந்த மாடல் அழகியான ஷெரினா 21 போட்டியாளர்களில் ஒருவராக பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார். இவர் சமீபத்தில் வெளியான வினோதய சித்தம் என்ற படத்தில் சமுத்திரக்கனியுடன் நடித்துள்ளார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் பிரகாசமான எதிர்காலம் இருக்கும் என்ற கனவுடன் வீட்டிற்குள் நுழைந்த ஷெரினாவுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வெறும் 28 நாளில் வீட்டிலிருந்து வெளியேறினார்.

ஷெரினா

ஷெரினா

பிக் பாஸ் அழகு பதுமையாக சுற்றி வந்த ஷெரினா பொம்மை டாஸ்க்கில் தனலட்சுமி தள்ளிவிட்டதால் தலையில் அடிபட்டதாக கூறி ஒரு பெரிய பஞ்சாயத்தே நடந்தது. ஷெரினா கீழே விழுந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு தலையில் அடிபடவே இல்லை சும்மா நடிக்கிறார் என்றும், இந்த நடிப்புக்கு ஆஸ்கர் விருதே தரலாம் என்று பல நெகடிவ் கருத்துக்கள் ஷெரினா மீது வைக்கப்பட்டது.

மனம் திறந்து பேட்டி

மனம் திறந்து பேட்டி

ஷெரினாவின் நடிவடிக்கையால் கடுப்பான பிக் பாஸ் பிரியர்கள் ஷெரினாவுக்கு வாக்களித்து காப்பாற்றாமல் அவருக்கு குறைந்த வாக்குகளை அளித்து வெளியில் அனுப்பி விட்டனர். எலிமினேட் ஆகி ஷெரினா பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து மனம் திறந்து பேட்டி அளித்துள்ளார்.

மக்களுக்கு எப்படி புரியும்

மக்களுக்கு எப்படி புரியும்

அதில், பிக் பாஸ் வீட்டிற்கு நான் போனதுமே பலரும் நான் பேசும் தமிழ் புரியவில்லை என்றனர். வீட்டில் இருப்பவர்களுகே புரியவில்லை என்றால் வெளியில் இருப்பவர்களுக்கு எப்படி புரியும் என்ற கேள்வி என் மனதில் எழுந்தது. அதுமட்டும் இல்லாமல் அங்கு இருக்கும் போட்டியாளர்களிடம் நான் பேசுவதை குறைத்துக்கொண்டேன். இதனால் தான் ஆயிஷாவிடம் அதிகமாக பேசினேன்.

உண்மையில் பயந்தேன்

உண்மையில் பயந்தேன்

தலையில் அடிபட்டது உண்மைதானா என்ற கேள்விக்கு பதிலளித்த ஷெரினா, நான் கீழே விழுந்த போது தனலட்சுமியின் கையில் என் முடி இருந்தது. இதனால், தனலட்சுமி தான் என்னை தள்ளி விட்டார் என்ற முடிவுக்கு வந்தேன். அதுமட்டும் இல்லாமல், ஏற்கனவே 5 மாதம் காலில் அடிபட்டு மிகவும் கஷ்டப்பட்டேன். இதனால், காலுக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயந்தேன் என்றார்.

அவர் மேலதான் க்ரஷ்

அவர் மேலதான் க்ரஷ்

மேலும், கதிர் மீது உங்களுக்கு க்ரஷ் இருக்கா என்ற கேள்விக்கு பதிலளித்த ஷெரினா, கதிர் ஒரு நல்ல நண்பர்தான், அதே போல அசீம் எனக்கு அண்ணன் இதை நான் நிகழ்ச்சியிலே சொல்லிவிட்டேன். அதே போல, பிக் பாஸ் வீட்டில் எனக்கு ஒருவர் மீது க்ரஷ் இருக்கு அவர் தான் பிக் பாஸ் என்றார். மேலும், குயின்சி மற்றும் ஆயிஷா என்னுடைய நல்ல நண்பர்கள். இவர்களுடனான நட்பை நான் தொடர விரும்புகிறேன் என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X