சினிமா மீது தீராத காதல்.. பிக்பாஸை தேடி வந்த மாடல் சோமசேகர்!
சென்னை: சினிமாவில் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் மாடல் சோம சேகர்.
பிக்பாஸ் சீசன் 4ன் ஓபனிங் நிகழ்ச்சி பார்வையாளர்கள் இல்லாமல் அரங்கேறி வருகிறது.
நிகழ்ச்சியின் தொகுப்பாளரான நடிகர் கமல்ஹாசன் ஒவ்வொரு போட்டியாளராய் அறிமுகப்படுத்தி பிக்பாஸ் வீட்டிற்குள் அனுப்பி வைத்து வருகிறார்.
இதுவரை 9 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள நிலையில் 10வது போட்டியாளராக மாடலான சோம சேகர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார்.

விஜய் டிவியில் 2010ஆம் ஆண்டு ஒளிபரப்பான அழகிய தமிழ் மகன் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் சோம சேகர். அதுமட்டுமின்றி சில படங்களிலும் நடித்துள்ளார். மேலும் விளம்பர படங்களிலும் நடித்துள்ளார் சோம சேகர்.
Recommended Video
சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார் சோம சேகர். பிக்பாஸ் நிகழ்ச்சி தனக்கு ஒரு நல்ல அடையாளத்தை கொடுக்கும் என்ற நம்பிக்கையுடன் வந்துள்ளார் சோம சேகர்.


Click it and Unblock the Notifications











