வெளியாகிறது 'மார்டன் லவ் சென்னை' தொடரின் முதல் பாடல்!!!

முதன் முறையாக மேஸ்ட்ரோ இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி. பிரகாஷ் குமார் மற்றும் ஷான் ரோல்டன் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ள 'மார்டன் லவ் சென்னை' தொடரின் ஆன்மாவைத் தூண்டும் இசை ஆல்பத்தை, அமேசான் ப்ரைம் வெளியிடுகிறது

ஒன்றுக்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்கள் இணையும் இந்த ஆல்பத்தில் மேஸ்ட்ரோ இளையராஜா, யுக பாரதி மற்றும் பாக்கியம் சங்கர் எழுதிய பாடல்களை ஷிவானி பன்னீர்செல்வம், வாகு மசான், ரம்யா நம்பீசன், கிறிஸ்டோபர் ஸ்டான்லி, அனன்யா பட், பிரியா மாலி மற்றும் பத்மப்ரியா ராகவன் போன்ற திறமையான பாடகர்கள் பாடியுள்ளனர்.

மாடர்ன் லவ் சென்னை இசை ஆல்பத்தில் 14 பாடல்கள் மற்றும் 4 இசைக்கருவிகளின் ஒலித் தொகுப்புகளும் உள்ளன, அவை இப்போது அனைத்து முன்னணி இசை தளங்களிலும் கிடைக்கின்றன.

Modern Love Chennai’s First Song Release

அமேசான் ஒரிஜினல் தொடர் மே 18 அன்று இந்தியாவிலும், உலகம் முழுவதும் 240 நாடுகள் மற்றும் பிராந்தியங்களிலும் திரையிடப்படும்.

Click for Music Album Here - https://smi.lnk.to/ModernLove-Chennai

Title Track lyrical video here - https://youtu.be/ZDsJkLGgs_w

மும்பை, இந்தியா, மே 13, 2023 - ஜான் கார்னி தலைமையில் வெளிவந்த சர்வதேசப் புகழ் பெற்ற ஒரிஜினல் தொகுப்பான மாடர்ன் லவ் ஃபிரான்சைஸின் மூன்றாவது இந்தியத் தழுவலாக வெளிவர இருக்கும் 'மாடர்ன் லவ் சென்னை' தொடரின், மனதைத் தொடும் ஆழமான, மகிழ்ச்சியான கதைகளைக் கொண்டாடும் விதமாக ஒன்றுக்கும் மேற்பட்ட இசையமைப்பாளர்கள் இசையமைத்துள்ள இசை ஆல்பத்தை பிரைம் வீடியோ வெளியிட்டது. மாடர்ன் லவ் மும்பை மற்றும் மாடர்ன் லவ் ஹைதராபாத் ஆகியவற்றின் வெற்றியைத் தொடர்ந்து, தமிழ் பதிப்பிலும் அதே மயக்கும் இசையைக் கொண்டு வந்துள்ளனர். சென்னையை மையமாக வைத்து நகரும் வசீகரிக்கும் கதைகளின் தொகுப்பை இந்தத் தொடர் கொண்டுள்ளது, இந்தத் தொடர் உறவுகளை ஆராய்ந்து, எல்லைகளைத் தாண்டி பயணித்து உங்கள் இதயங்களுக்கு ஆறுதல் அளிக்கும் என்பது உறுதி. இந்தத் தொடரில் மேஸ்ட்ரோ இளையராஜா, யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி. பிரகாஷ் குமார், ஷான் ரோல்டன் மற்றும் ஷிவானி பன்னீர்செல்வம், வாகு மசான், ரம்யா நம்பீசன், கிறிஸ்டோபர் ஸ்டான்லி, அனன்யா பட், பிரியா மாலியான் மற்றும் பத்மப்ரியா ராகவன் உள்ளிட்ட பாடகர்கள் இணைந்துள்ளனர். இந்த இசை ஆல்பமானது அமேசான் ஒரிஜினல் தொடரின் ஒவ்வொரு கதையின் சாராம்சத்தையும் அழகாக வெளிப்படுத்தியுள்ளது.

மாடர்ன் லவ் சென்னையில் ஆறு அத்தியாயங்களில் 14 அசல் பாடல்கள் மற்றும் 4 இசைக்கருவிகளின் தொகுப்பு உள்ளது, அவை தமிழ் திரை இசைத்துறையைச் சேர்ந்த நான்கு திறமையான இசையமைப்பாளர்களால் இயற்றப்பட்டுள்ளன.

மாடர்ன் லவ் சென்னை தொடரின் இசை ஆல்பத்தை சோனி மியூசிக் சவுத் மூலம் வெளியிடப்படுவதோடு உலகளவில் முக்கிய ஸ்ட்ரீமிங் சேவைகளிலும் கிடைக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X