Modern Love Chennai: எதெல்லாம் வொர்த்.. எதெல்லாம் வொர்ஸ்ட்.. மாடர்ன் லவ் சென்னை ட்விட்டர் விமர்சனம்!
சென்னை: தியேட்டர்கள் திறக்கப்பட்ட பின்னர் மினி பட்ஜெட் படங்கள் கூட ஒரு நாள் தியேட்டரில் ஓடினாலும் போதும் என ரிலீஸ் ஆகி வருகின்றன. அதே நேரம் ஓடிடி தளங்களும் தங்களுக்கான ஸ்பெஷல் படங்களையும் வெப்சீரிஸ்களையும் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
இந்நிலையில், பல பிரபல இயக்குநர்கள் இயக்கத்தில் உருவாகி உள்ள மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் இன்று வெளியாகி உள்ளது.

பாரதிராஜா, ராஜு முருகன், தியாகராஜா குமாராஜா, பாலாஜி சக்திவேல், கிருஷ்ணகுமார் மற்றும் அக்ஷய் சுந்தர் என முழுக்க முழுக்க ஆண் இயக்குநர்கள் எழுதியுள்ள மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜி படத்தில் எதெல்லாம் வொர்த் எதெல்லாம் வொர்ஸ்ட் என நெட்டிசன்கள் விமர்சித்துள்ளதை இங்கே பார்க்கலாம் வாங்க..
பாலாஜி சக்திவேல் சார் சூப்பர்: மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜியில் இயக்குநர் பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் வெளியாகி உள்ள இமைகள் படம் அருமையாக உள்ளது. மேலும், எமோஷனலாக நல்லாவே கனெக்ட் ஆகி உள்ளதாக இந்த ரசிகர் அந்த எபிசோடை பாராட்டி உள்ளார்.
நெட்டிசன்கள் பலரும் பாலாஜி சக்திவேல் இயக்கி உள்ள இமைகள் படத்தை பாராட்டி உள்ளனர். அசோக் செல்வன், பானு இந்த கதையில் பக்காவாக நடித்துள்ளதாக இந்த ரசிகர் குறிப்பிட்டுள்ளார்.

யோவ் மிலிட்ரி நீ எங்க இங்க: விமர்சகர் பரத்வாஜ் ரங்கநாதனும் இந்த ஆந்தாலஜியில் நடித்துள்ளார். அவரை பார்த்ததும் ரசிகர்கள் யோவ் மிலிட்ரி நீ எங்க இங்க என கலாய்த்து வருகின்றனர். மேலும், இவர் ஒரு இங்கிலீஷ் பேசுற ப்ளூ சட்டை என்றும் ட்ரோல்களும் மீம்களும் பறக்கின்றன.
ஏகே 62 படத்தை நீங்களா இயக்குறீங்க என எப்போ பரத்வாஜ் ரங்கநாதன் விக்னேஷ் சிவனை பார்த்து கேட்டாரோ அந்த படத்தில் இருந்தே அவரை தூக்கிட்டாங்க, அப்படியொரு வாய் இவருக்கு என வச்சு செய்து வருகின்றனர்.

நினைவோ ஒரு பறவை: ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் படங்களை இயக்கிய தியாராஜா குமாராஜா இயக்கத்தில் உருவாகி உள்ள 6வது எபிசோடு நினைவோ ஒரு பறவை வேறலெவல் அனுபவம் என சிலர் சிலாகித்து வருகின்றனர். சிலர் அந்த படம் பிடிக்கவில்லை என கலவையான விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

செம மொக்கை: கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள காதல் என்பது கதை டோட்டல் க்ரிஞ்ச், செம மொக்கை பார்க்கவே முடியல, பாலாஜி சக்திவேல் சார் படம் சூப்பர். ராஜு முருகன் இயக்கத்தில் வெளியாகி உள்ள லால்குண்டா பொம்மை ஆவரேஜ் என இந்த நெட்டிசன் விமர்சித்துள்ளார்.

எதெல்லாம் வேஸ்ட்: எதெல்லாம் வொர்த், எதெல்லாம் வேஸ்ட் என இந்த நெட்டிசன் ட்வீட் போட்டு விமர்சித்துள்ளார். லால் குண்டா பொம்மைகள், இமைகள் வொர்த். பாரதிராஜா இயக்கிய பறவை கூட்டில் மற்றும் அக்ஷய் சுந்தர் இயக்கிய மார்கழி ஓகே, கிருஷ்ணகுமார் இயக்கிய காதல் என்பது மற்றும் தியாகராஜா குமாரராஜா இயக்கிய நினைவோ ஒரு பறவை வொர்ஸ்ட் என இவர் விமர்சித்துள்ளார். அமேசான் பிரைமில் வெளியாகி உள்ள இந்த மாடர்ன் லவ் சென்னை ஆந்தாலஜியை பார்த்து விட்டு உங்களுக்கு பிடித்த கதை எது என கமெண்ட் பண்ணுங்க!



Click it and Unblock the Notifications











