twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Modern Love Mumbai : எனக்கு 60.. அவனுக்கு 30.. வித்தியாசமான காதல் கதை.. விவகாரமான ரோலில் சரிகா!

    |

    சென்னை : கமலின் முன்னாள் மனைவி சரிகா 'மாடர்ன் லவ் மும்பை' என்ற ஆந்தாலஜி திரைப்படத்தில் விவகாரமான ரோலில் நடித்துள்ளார்.

    ஆறு விதவிதமான காதல் கதைகளை கொண்ட இந்த "Mordern Love Mumbai" ஆந்தாலஜி திரைப்படம் அமேசான் பிரைமில் நேற்று வெளியானது.

    இதில் வரும் குறும்படங்கள் சற்று விவகாரமாக இருந்தாலும், அந்த ஆந்தாலஜி திரைப்படம் வரவேற்பை பெற்றுள்ளது.

    Modern Love Mumbai

    Modern Love Mumbai

    மாடர்ன் லவ் மும்பை என்ற தலைப்பில், விஷால் பரத்வாஜ், ஹன்சல் மேத்தா, ஷோனாலி போஸ், துருவ் சேகல், அலங்கிரிதா ஸ்ரீவஸ்தவா மற்றும் நூபுர் அஸ்தானா என ஆறு இயக்குநர்கள் இணைந்து வித்தியாசமான ஆறு காதல் கதைகளை இதில் விவரித்துள்ளனர்.

    'மை பியூட்டிஃபுல் ரிங்கில்ஸ்'

    'மை பியூட்டிஃபுல் ரிங்கில்ஸ்'

    இந்த ஆந்தாலஜியில் 'மை பியூட்டிஃபுல் ரிங்கில்ஸ்' என்ற குறும்படத்தில் கமலின் முன்னாள் மனைவி சரிகா நடித்துள்ளார். இதில், 60 வயதான சரிகாவை 30 வயது இளைஞன் காதலிக்கிறார் இது தான் இந்த திரைப்படத்தின் ஒன் லைன். இதில் தனேஷ் ரஸ்வி மற்றும் அஹ்சாஸ் சன்னா ஆகியோர் நடித்துள்ளனர். அலங்கிரிதா ஸ்ரீவஸ்தவா இந்த குறும்படத்தை இயக்கி உள்ளார்.

    எனக்கு 60... அவனுக்கு 30

    எனக்கு 60... அவனுக்கு 30

    கணவனை விபத்தில் பறிகொடுத்த சரிகா, அவரின் நினைவுகளுடன் வாழ்ந்து வருகிறார். அப்போது, குணால் என்ற இளைஞடன் நட்பு ஏற்படுகிறது. ஒரு கட்டத்தில் அந்த இளைஞன் சரிகாவின் கண், தலைமுடி குறித்து வர்ணித்து இறுதியில் தன் மனதில் இருக்கும் காதலை சொல்லிவிடுகிறான். இதை, கேட்டு அதிர்ச்சி அடைந்த சரிகா, குணாலை கண்டிக்கிறாள். ஆனால், சரிகாவின் மனது குணாலை தேடுகிறது. இது சரியா...தவறா..எனக்கு 60... அவனுக்கு 30 என பல கேள்விகள் மனதிற்குள் வர இறுதியாக ஓர் முடிவேடுத்து குணாலை மீண்டும் வீட்டுக்கு அழைக்கிறாள். அதன் பின் ஓர் அழகான திருப்பத்துடன் கதை முடிகிறது.

    விவகாரமான கதை

    விவகாரமான கதை

    நீண்ட நாட்களுக்கு பின் திரையில் தோன்றிய சரிகா, சரக்கு, தம்முடன் பட்டையை கிளப்பி நடித்துள்ளார். குணாலை கண்டித்துவிட்டு, பின் அவன் வரவுக்காக காத்து இருப்பது, ஜன்னலை எட்டிப்பார்ப்பது என ஒரு டீன் ஏஜ் கேர்ள் போல நடித்துள்ளார் சரிகா. கதை விவகாரமான கதையாக இருந்தாலும் எந்த இடத்திலும் விரசமில்லாமல் கதை அழகாக செல்கிறது.

    காதலுக்கு வயது தடையில்லை

    காதலுக்கு வயது தடையில்லை

    காதலுக்கும், காதலிக்கப்படுவதற்கும் வயது ஒரு தடையில்லை என்பதையும், இருப்பது ஒரே ஒரு வாழ்க்கைதான் இந்த வாழ்க்கையை ரசித்து, ருசித்து, மகிழ்ச்சியை அனுபவித்து வாழ்ந்துவிட வேண்டும் என்பதை 'மை பியூட்டிஃபுல் ரிங்கில்ஸ்' குறும்படம் சொல்கிறது. அமெசான் பிரைமில் வெளியாகி உள்ள அந்த ஆந்தாலஜி திரைப்படம் வரவேற்பை பெற்றுள்ளது.

    English summary
    Modern Love Mumbai Anthology Review
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X