SS Rajamouli: ராஜமௌலி அ முதல் ஃ வரை.. கெத்து காட்டும் தெலுங்கு சினிமா! ரிலீஸ் ஆகும் டாக்குமெண்டரி

சென்னை: தெலுங்கு சினிமாவில் பிரம்மாண்டமான இயக்குநர் என்றால் அது அனைவரும் சொல்வது எஸ்.எஸ். ராஜமௌலியைத்தான். பாகுபலி படத்தின் முதல் பாகத்தின் மூலம் அவர் தென்னிந்திய சினிமாவின் முகமாக மாறினார், பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தின் மூலம் இந்திய சினிமாவின் முகமாக அங்கீகாரம் பெற்றார். இப்படி படிப்படியாக வளர்ந்து வந்த எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் கடைசியாக வெளியான ஆர்.ஆர்.ஆர் படத்தின் மூலம் சர்வதேச சினிமா கலைஞராக அங்கீகாரம் பெற்றார்.

பாகுபலி படத்தின் இராண்டாம் பாகம் இரண்டு ஆயிரம் கோடிகளுக்கு மேல் உலகம் முழுவதும் வசூல் செய்தது. ஆர்.ஆர். ஆர்., படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் பிரிவில் ஆஸ்கார் விருது கொடுக்கப்பட்டது. ஆர்.ஆர்.ஆர்., படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கொடுக்கப்பட்டதால் இந்த படம் உலகம் முழுவதும் ரீச் ஆனது. இதனால் உலகத்தின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவராக இருக்கக்கூடிய ஜேம்ஸ் கேமரூன் போன்றோர் இந்த படத்தினை பாராட்டியிருந்தனர்

SS Rajamouli Netflix

இந்நிலையில் எஸ்.எஸ். ராஜமௌலி குறித்த ஆவணப்படத்தினை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வெளியிடவுள்ளது. இந்த தகவல் வெளியானது தெலுங்கு சினிமாவினர் இந்த தகவலை மகிழ்ச்சியாக பகிர்ந்து வருகின்றனர். குறிப்பாக தெலுங்கு சினிமா ரசிகர்கள் ராஜமௌலிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த ஆவணப்படத்திற்கு மார்டன் மாஸ்டர்ஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இதுமட்டும் இல்லாமல் வரும் ஆகஸ்ட் மாதாம் 2ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் ராஜமௌலி குறித்த மார்டன் மாஸ்டர்ஸ் ஆவணப்படம் வெளியாகவுள்ளது.

SS Rajamouli Netflix

சினிமாவில் புரட்சி: இந்த ஆவணப்படம் மொத்தம் ஒரு மணிநேரம் 14 நிமிடங்கள் ஓடக்கூடியது. அதாவது மொத்தம் 74 நிமிடங்களுக்கு உருவாக்கப்பட்டுள்ளது. பிரபல விமர்சகர் அனுபமா சோப்ரா வாய்ஸ் ஓவரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆவணப்படம், ராஜமௌலி எப்படி இந்திய சினிமாவில் புரட்சியை ஏற்படுத்தினார் மற்றும் சர்வதேச சினிமாவில் தாக்கத்தை ஏற்படுத்தினார் என்பதை விளக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

SS Rajamouli Netflix

கேம்ஸ் கேமரூன்: இது தொடர்பாக வெளிநாட்டு ஆங்கில ஊடகங்களில் வெளியான செய்தியின்படி, இந்த ஆவணப்படத்தில் ஜேம்ஸ் கேமரூன், ஜோ ரூசோ, கரண் ஜோஹர், பிரபாஸ், ஜூனியர் என்டிஆர், ராம் சரண் மற்றும் ராணா டகுபதி ஆகியோரின் பேட்டியும், அவரைப் பற்றி இதுவரை வெளியில் தெரியாத பல விஷயங்களைப் பகிர்ந்துள்ளனர்.

உலக சினிமா ரசிகர்களுக்கு: இந்த ஆவணப்படத்தை, அப்ளாஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ஃபிலிம் கம்பானியன் ஸ்டுடியோ தயாரித்துள்ளது. இதனை நெட்ஃபிளிக்ஸ் வெளியிடுகின்றது. இந்த ஆவணப்படத்தில் ஏற்கனவே குறிப்பிட்டதைப் போல நேர்காணல்கள் மற்றும் திரைக்குப் பின்னால் ராஜமௌலி எப்படியானவர், ராஜமௌலியின் அசாதாரண பயணத்தை எடுத்துக்காட்டுகின்றன. ராஜமௌலி தனது அடுத்த படத்தில் மகேஷ் பாபுவை வைத்து இயக்கி ஹாலிவுட்டில் பெரும் அதிர்வை ஏற்படுத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகின்றது. இந்த ஆவணப்படம் வெளியான பின்னர் ராஜமௌலி குறித்து உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களுக்கு தெரியவரும் என கூறப்படுகின்றது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X