மோடி-அம்பேத்கர் ஒப்பீடு விவகாரம்.. ஏய் வாய மூடு.. நிருபரை ஒருமையில் திட்டிய கங்கை அமரன் !
சென்னை : அம்பேத்கருடன் மோடியை ஒப்பிட்ட விவகாரம் குறித்த சர்ச்சைக்குரிய கேள்வியால் கடுப்பான கங்கை அமரன் நிருபரை ஏய் வாய மூடு என்று ஒருமையில் திட்டினார்.
இந்த வீடியோ இணையத்தில் டிராண்டாகி வரும் நிலையில் நெட்டிசன்ஸ்கள் பலர் கங்கை அமரனின் பேச்சு குறித்து கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

முற்றிலும் தவறானது
பிரதமர் மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு முன்னுரை எழுதி இருந்தார். இளையராஜாவின் இந்தக் கருத்துகள் சில நாட்களாக சர்ச்சையையும், விவாதத்தையும் தூண்டியிருக்கிறது. மோடியை அம்பேத்கருடன் ஒப்பிடுவது முற்றிலும் தவறானது, முரணானது என்றும் சமூக வலைதளங்களில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மன்னிப்பு கேட்க முடியாது
அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு, தான் பேசிய கருத்துக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்று இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்ததாக, அவரது சகோதரரும், இசையமைப்பாளருமான கங்கை அமரன் தெரிவித்து இருந்தார்.

ஆவேசமாக கத்தினார்
இந்நிலையில், இளையராஜாவின் சகோதரர் கங்கை அமரன் அளித்துள்ள பேட்டியில், அந்த முன்னுரையை நீங்கள் தான் எழுதியதாக தகவல் பரவி வருகிறது. அதை நீங்கள் எழுதினீர்களா? என நிருபர் கேள்வி எழுப்பினார். இந்த கேள்வியால் கோவமடைந்த கங்கை அமரன். என்னை குற்றவாளி மாதிரி நீ எப்படி அந்த கேள்வி கேட்பா என்று ஆவேசமாக கத்தினார். செய்தியாளர் எவ்வளவோ அமைதியாக பேசிய போதும், கங்கை அமரன் செய்தியாளரை ஒருமையில் ஏய்...நீ வா போ என பேசினார்.

அறிவே இல்லாத நாய்
அந்த முன்னுரையை நான் தான் எழுதுனேன் என்ன பண்ணுவே... அப்படி பேசுறவன் எல்லாம் முட்டாள், அறிவே இல்லாத நாய் என்றார். மோடியை பற்றி பேசுவது என் இஷ்டம், எனக்கு பால்கோவா சாப்பிட கூட தான் பிடிக்கும். அது எப்படி பிடிக்காலானு நீ கேள்வி எழுப்ப முடியுமா? என்று போயா...வாயா ...என சகட்டு மேனிக்கு நிரூபரை திட்டிதீர்த்துவிட்டார். கங்கை அமரன் பேசியதைப்பார்த்த நெட்டிசன்கள் அவரை விளாசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











