Suresh Gopi: சுரேஷ் கோபி மகள் திருமணத்தில் கலந்து கொண்ட மோடி.. தீனா அஜித் வரலையேப்பா!

திருவனந்தபுரம்: பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் மகள் திருமணம் இன்று எளிமையான முறையில் குருவாயூர் கோயிலில் நடைபெற்றது. அந்த திருமணத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்ட காட்சிகள் தற்போது சினிமா ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. மேலும், மோகன்லால் உள்ளிட்ட ஒட்டுமொத்த மலையாள திரையுலக பிரபலங்களும் திருமண விழாவில் கலந்து கொண்டுள்ளனர்.

தீனா படத்தில் அஜித்துக்கு அண்ணனாக ஆதிகேசவன் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் சுரேஷ் கோபி. அண்ணன் பொண்ணு கல்யாணத்துக்கே தீனா அஜித் வரலையேப்பா என ரசிகர்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.

Modi attends Suresh Gopi daughter wedding and Ajith not attended

நடிகர் சுரேஷ் கோபி: 1965ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஓடையில் நின்னு படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து மலையாள திரையுலகில் அறிமுகமானவர் தான் சுரேஷ் கோபி. 1998ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான களியாட்டம் படத்திற்காக தேசிய விருது வென்றவர். தென்னிந்திய மொழிகளில் பல படங்களில் நடித்து பிரபலமான இவர் தமிழிலும் நிறைய படங்களில் நடித்துள்ளார்.

Modi attends Suresh Gopi daughter wedding and Ajith not attended

தீனா ஆதிகேசவன்: தமிழில் 1984ம் ஆண்டு வெளியான நிரபராதி படத்தின் மூலம் கோலிவுட்டில் அடியெடுத்து வைத்தார் சுரேஷ் கோபி. ஆனால், தீனா திரைப்படம் தான் ஒட்டுமொத்த ரசிகர்களுக்கும் அவரை அடையாளப்படுத்திக் காட்டியது. 2001ல் அஜித் நடிப்பில் வெளியான தீனா படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கி இருந்தார். அந்த படத்தில் தீனாவின் அண்ணன் ஆதிகேசவனாக சுரேஷ் கோபி நடித்திருந்தார். அதன் பின்னர் சரத்குமாரின் சமஸ்தானம், ஷங்கர் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த ஐ உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார். மேலும், விஜய் ஆண்டனியின் தமிழரசன் மற்றும் ஆழி உள்ளிட்ட தமிழ் படங்கள் இவர் நடிப்பில் வெளிவர காத்திருக்கின்றன.

சுரேஷ் கோபி மகள் திருமணம்: சுரேஷ் கோபி ராதிகா நாயர் என்பவரை 1990ல் திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு மொத்தம் 5 குழந்தைகள். அதில், சுரேஷ் கோபியின் மகள் பாக்யா சுரேஷ் இன்று காலை குருவாயூர் கோயிலில் ஸ்ரேயாஸ் மோகன் என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். குருவாயூர் கோயிலில் காலை 8.45 மணிக்கு இந்த திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

பிரதமர் மோடி பங்கேற்பு: பாஜகவில் இணைந்து பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் சுரேஷ் கோபியின் திருமணத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி நேரில் குருவாயூர் கோயிலுக்கு வந்து சுரேஷ் கோபியின் மகள் பாக்யா சுரேஷ் மற்றும் மணமகன் ஸ்ரேயாஸ் மோகனை வாழ்த்தியுள்ளார். அதன் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

மோகன்லால் நேரில் வாழ்த்து: மேலும், மோகன்லால் உள்ளிட்ட பல மலையாள சினிமா பிரபலங்கள் சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அதன் காட்சிகளும், புகைப்படங்களும் டிரெண்டாகி வருகின்றன.

அஜித் வரலை: தீனாவில் சுரேஷ் கோபியுடன் இணைந்து நடித்த அஜித் வரவில்லையே என சுரேஷ் கோபியின் மகளுக்கு திருமணம் என்கிற செய்தி பரவியதும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். அஜித்தின் அடுத்த படத்தை இயக்கப் போகும் ஆதிக் ரவிச்சந்திரன் திருமணத்துக்கே அவர் செல்லவில்லை. எப்பவோ இணைந்து நடித்து சுரேஷ் கோபி மகள் திருமணத்துக்கா செல்லப் போகிறார் என்றும் கமெண்ட்டுகள் பறக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X