twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பாவம் மோடிஜிக்கு கொடுத்து வைத்தது அவ்வளவு தான்: உமர் அப்துல்லா கிண்டல் #PMNarendraModi

    By Siva
    |

    Recommended Video

    மோடியின் வழக்கை வரலாறு படமாக உருவாகிறது- வீடியோ

    ஸ்ரீநகர்: மோடியின் வாழ்க்கை வரலாறு பற்றி முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா கலாய்த்து போட்டுள்ள ட்வீட் நெட்டிசன்களை கவர்ந்துள்ளது.

    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறு தி ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் என்ற பெயரில் படமாகியுள்ளது. அதில் சீனியரான அனுபம் கேர் நடித்துள்ளார்.

    இந்நிலையில் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்று படமான பி.எம். நரேந்திர மோடியில் விவேக் ஓபராய் நடிக்கிறார்.

    2018ம் ஆண்டின் பெஸ்ட் இயக்குநர்

    மோடி

    மோடி

    பி.எம். நரேந்திர மோடியின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதை பார்த்தால் மோடி மாதிரியே தெரியவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இதை மோடி என்றால் மோடியே நம்ப மாட்டார் என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் போஸ்டர் குறித்து முன்னாள் ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா ட்வீட் செய்துள்ளார்.

    உமர் அப்துல்லா

    வாழ்க்கை நியாயமற்றது. டாக்டர் மன்மோகன் சிங்காக நடிக்க அனுபம் கேர். பாவம் மோடிஜிக்கு விவேக் ஓபராய். சல்மான் கான் நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று உமர் அப்துல்லா ட்வீட்டியுள்ளார்.

    சல்மான்

    சல்மான் கான் மோடியாக அல்ல மாறாக ராகுல் காந்தியாக நடித்தால் நன்றாக இருக்கும். இருவரும் ஒரே மாதிரி என்று ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.

    கலாய்

    உமர் அப்துல்லாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்தால் அதில் சுயதம்பட்ட ஆசாமி கமால் ஆர். கான் நடித்தால் நன்றாக இருக்கும் என்று நெட்டிசன்கள் கிண்டல் செய்துள்ளனர்.

    English summary
    Former Chief Minister of Jammu and Kashmir Omar Abdullah tweeted that, "Life is unfair. Dr Manmohan Singh got someone of the calibre of Anupam Kher. Poor Modi ji has to settle for Vivek Oberoi. Salman Khan hota toh kya maza aata."
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X