இந்திய தேசிய சினிமா அருங்காட்சியகத்தை நாளை திறந்து வைக்கும் மோடி

By Siva

மும்பை: மும்பையில் ரூ. 140.61 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்திய தேசிய சினிமா அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள 19ம் நூற்றாண்டு அரண்மனையான குல்ஷன் மஹால் மற்றும் ஒரு கட்டிடம் என்று 2 கட்டிடங்களில் இந்திய தேசிய சினிமா அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

Modi to inaugurate National Museum of Indian Cinema tomorrow

இந்திய சினிமா வரலாற்று புகைப்படங்கள், வீடியோக்கள், சாதனங்கள் ஆகியவை அந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. 1998ம் ஆண்டு துவங்கப்பட்ட அருங்காட்சியக பணி முடிந்தும் அதன் திறப்பு விழா நடைபெறுவதில் சிக்கல் இருந்து வந்தது.

இந்நிலையில் அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார். இந்த விழாவில் பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அக்ஷய் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.

ரூ. 140.61 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம் கடந்த 2013ம் ஆண்டே தயாராகிவிட்டது. இருப்பினும் திறக்கப்படவில்லை. அதன் பிறகு 2017ம் ஆண்டு திறக்கப்படும் என்று கூறப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஒரு வழியாக நாளை திறக்கப்படுகிறது

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X