twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மோடி ஜி தென்னிந்திய சினிமாவை ஏன் ஒதுக்கி வைக்கிறீங்க - உபாசனா ராம்சரண் வேதனை

    |

    ஹைதராபாத்: இந்திப் பட நடிகர்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவத்தை ஏன் தென்னிந்திய சினிமாக்களுக்கு தருவதில்லை என்று நடிகர் ராம்சரண் மனைவி உபாசனா பிரதமர் மோடியிடம் கேட்டுள்ளார். மேலும், பெரிய ஆளுமைகள், பழைய கலாச்சார அடையாளங்களின் பிரதிநிதித்துவமும் இந்தி நடிகர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுவதாகவும் அவர் வருத்தத்துடன் கேள்வி எழுப்பியுள்ளார்.

    பொதுவாக, ஆஸ்கார் விருது மற்றும் உலகளாவிய சினிமாவைப் பொறுத்தவரையில், இந்திய சினிமா என்றால் அது இந்திப் படங்கள் மட்டுமே என்று நம்பவைக்கப்பட்டு வருகிறது. உலக திரைப்பட விழாக்களிலும் இந்தி சினிமாக்களே முன் வரிசையில் சேர் போட்டு உட்கார்ந்துவிடுகின்றன.

    Modi Ji Why you are neglecting The South Film Industry-Upasana Ram Charan

    ஆஸ்கார் விருது பட்டியலுக்கும் இந்திப்படங்களே தொடர்ந்து முன்னிறுத்தப்பட்டு வருகின்றன. இந்த ஆண்டுக்கான ஆஸ்கார் விருதுக்கு செல்லும் பட்டியலில் கூட முதலில், தமிழ் படங்களான வடசென்னை, ஒத்த செருப்பு சைஸ் 7 ஆகிய படங்கள் செல்லும் என்று தென்னிந்திய ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தனர்.

    ஆனால், கடைசி நேரத்தில் தத்கால் டிக்கெட் வாங்கிக்கொண்டு வந்தது போல், ரன்வீர் சிங் நடித்த கல்லி பாய் ஆஸ்கார் விருதுக்கான இறுதிப்பட்டியலில் இடம்பிடித்துவிட்டது. அதே சமயத்தில் வட சென்னையும் ஒத்த செருப்பு சைஸ் 7ம் தூக்கி எறியப்பட்டன. இது காலம் காலமாக நடைபெற்று வரும் இருட்டடிப்பு என்றே தமிழ் சினிமா பிரபலங்களும் புலம்பி வருகின்றனர்.

    தனுஷ் மாரி செல்வராஜ் கூட்டணியில் இணைந்த சீமராஜா வில்லன் லால்தனுஷ் மாரி செல்வராஜ் கூட்டணியில் இணைந்த சீமராஜா வில்லன் லால்

    சமீபத்தில் பாலிவுட் நட்சத்திரங்களை சந்தித்து பிரதமர் மோடி உரையாடினார். இதனைத் தொடர்ந்து தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம் சரணின் மனைவி உபாசனா, தனது வேதனையை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், தெலுங்கு நடிகர் ராம்சரண் மனைவி உபாசனா, தென்னிந்திய சினிமா மத்திய அரசால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவது குறித்து தன்னுடைய வேதனையை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வெளிப்படுத்தியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது.

    டியரஸ்ட் நரேந்திர மோடி ஜி, தென்னிந்தியாவில் இருக்கும் நாங்கள் உங்களை மிகவும் மதிக்கிறோம். உங்களை பிரதமராக கொண்டதற்காக நாங்கள் மிகவும் பெருமைப்படுகிறோம். ஆனால் பெரிய ஆளுமைகள், பழைய கலாச்சார அடையாளங்களின் பிரதிநிதித்துவம் இந்தி நடிகர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. தென்னிந்திய சினிமா முற்றிலும் புறக்கணிக்கப்படுவதாகவே நாங்கள் உணர்கிறோம். நான் என் உணர்வுகளை மிகவும் வேதனையுடன் இங்கே வெளிப்படுத்துகிறேன். இது சரியான மன நிலையில் ஆக்கப்பூர்வமான முறையில் எடுக்கப்பட்டதாகவே நம்புகிறேன்... ஜெய்ஹிந்த்.. என்று குறிப்பிட்டுள்ளார், உபாசனா... தற்போது இந்த லெட்டர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    English summary
    Dear Modi Ji, We in the South of India admire you & are proud to have you as our Prime Minister. With all due respect, we felt that the representation of leading personalities & Cultural Icons was limited only to Hindi Artists and The South Film Industry was completely neglected, asked Upasana.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X