மோடிஜி நீங்க அறிவிப்பு விட்டாலே பயந்து கெடக்கு: அஜித் பட நடிகை கலகல
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி புது அறிவிப்பு வெளியிடுவதாக தெரிவித்தவுடன் ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு என்கிறார்கள் திரையுலக பிரபலங்கள்.
காலை 11.45 மணி முதல் 12 மணிக்குள் நான் முக்கிய தகவலுடன் நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்தார். அவர் ட்வீட் செய்த வேகத்தில் வங்கிகளுக்கும், ஏ.டி.எம். மையங்களுக்கும் ஓடியவர்கள் பலர்.
இந்நிலையில் மோடியின் அறிவிப்பு குறித்து திரையுலக பிரபலங்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
பியா பாஜ்பாய்
அடிக்கு கூட பயம் இல்லை சார். ஆனால் புது அறிவிப்பு என்றால் பயமாக உள்ளது. தப்பிச்சோம் என்று நடிகை பியா பாஜ்பாய் ட்வீட் செய்துள்ளார்.
சி.எஸ். அமுதன்
மோடியின் அறிவிப்பு குறித்து தான் இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இயக்குநர் சி.எஸ். அமுதன்.

தைரியம்
இந்த நடிகை பியா பாஜ்பாய்க்கு தைரியத்தை பாரேன், பிரதமரையே கலாய்த்துள்ளார் என்கிறார்கள் ரசிகர்கள். பியா தற்போது பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பணம்
மோடி இன்று கரும்பச்சை நிற கோட்டுடன் மக்களிடம் பேசியதால் ஒரு வேளை அந்த நிறத்தில் புது ரூபாய் நோட்டு வருகிறதோ என்று மக்கள் நினைத்தனர். நல்ல வேளை பணம் பற்றி எதுவும் கூறவில்லை என்று அனைவரும் நிம்மதி அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











